இனிமேல் குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ.99 கிடையாது. ஏர்டெல் கொடுத்த அதிர்ச்சி தகவல்

 இனிமேல் குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ.99 கிடையாது. ஏர்டெல் கொடுத்த அதிர்ச்சி தகவல்














பார்தி ஏர்டெல் நிறுவனம், ஹரியானா மற்றும் ஒடிசாவில் 28 நாட்கள் மொபைல் போன் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57 சதவீதம் அதிகரித்து ரூ.155 ஆக உயர்த்தியுள்ளது. 

ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99 ஐ நிறுத்தியுள்ளது, இதன் கீழ் 200 மெகாபைட் டேட்டா மற்றும் அழைப்புகளை வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் வழங்குகிறது. 

ஹரியானா மற்றும் ஒடிசாவில், ஏர்டெல் இப்போது வரம்பற்ற அழைப்பு, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களுடன் ரூ.155-திட்டத்தை வழங்கத் தொடங்கியுள்ளது.


இந்த புதிய திட்டம் சோதனை வடிவில் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை வெளியிட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஏர்டெல்லில் 155 ரூபாய்க்கும் குறைவான எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவுடன் கூடிய அனைத்து 28 நாள் அழைப்புத் திட்டங்களும் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. இதன் பொருள், மாதாந்திர திட்டத்தில் எஸ்எம்எஸ் சேவையைப் பெறுவதற்கு கூட, ஒரு வாடிக்கையாளர் தனது மொபைல் ஃபோன் கணக்கை ரூ.155க்கு கட்டாயம் சார்ஜ் செய்ய வேண்டும்.


ஹரியானா மற்றும் ஒடிசா வட்டங்களில் பார்தி ஏர்டெல் சந்தை சோதனை கட்டண உயர்வை மேற்கொண்டுள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் கூறியது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“முந்தைய ரூ.99 ரீசார்ஜ் ரூ.99 டாக்-டைம் மதிப்பைக் கொண்டிருந்தது மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 200 எம்பி டேட்டாவைக் கொண்டிருந்தது. இதற்கு மாறாக, இப்போது புதியதாக அறிமுகம் செய்யப்படும் ரூ.155 குறைந்தபட்ச ரீசார்ஜ் வரம்பற்ற கால்கள், 1ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இது குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில் 57 சதவீத உயர்வாகும். 

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் சலுகையை ரூ. 79 இலிருந்து ரூ. 99 ஆக உயர்த்தியபோது இதேபோன்ற சோதனை முயற்சியை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


"தற்போதைய சந்தை சூழ்நிலையில் கட்டண உயர்வை செயல்படுத்துவதில் தொழில்துறையின் முதல் படியை ஏர்டெல் எடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு போதுமான ஆதரவைக் கிடைக்கவில்லை என்றால், பாரதி ரூ.99 பேக்கை மீண்டும் கொண்டு வர வேண்டியிருக்கலாம். 


புதியது பழையவை

தொடர்பு படிவம்