மியூச்சுவல் ஃபண்டில் SIP என்ற முறையில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், அந்த முதலீடு பெருக்கிக் கொண்டே வரும் என்றும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் நமக்கு ஒரு மிகப் பெரிய தொகை கிடைக்கும் என்பது தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் அந்த முதலீட்டில் இருந்து நாம் அவசர தேவைக்கு பணம் எடுத்தால், அந்த பணம் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் SWP என்ற முறையில் நாம் ஒவ்வொரு மாதமும் பணத்தை திரும்ப எடுத்தால், அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம் போல் நம்முடைய முதலீடு பணம் குறையாமல் இருக்கும் என்பதுதான் ஒரு மிகப்பெரிய மாயாஜாலமாகும்.
SWP மூலம் ஒருவர் 3 கோடி ரூபாய் முதலீடு செய்தால், அதில் 15% வருமானம் கிடைத்து ஒரு ஆண்டில் மட்டும் நமக்கு 45 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். அதாவது மாதம் மாதம் நீங்கள் 3.75 லட்சம் பெறுவீர்கள் என்பதும், உங்களுடைய முதலீட்டு தொகை 3 கோடி என்பது குறையாமல் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை நீங்கள் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால், மாதம் உங்களுக்கு 1.25 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதும், அந்த ஒரு கோடி முதலீடு குறையாமல் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
25 வயதில் ஒவ்வொரு மாதமும் 15000 முதல் 25000 ரூபாய் வரை முதலீட்டை தொடங்கி 40 வயது வரை முறையாக SIP மூலம் முதலீடு செய்தால், 40 வயதில் கண்டிப்பாக ஒரு கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை கிடைக்கும். அதன் பிறகு நீங்கள் ஒவ்வொரு மாதமும் எSWP மூலம் பணம் பெற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கலாம் என்று பொருளாதார ஆலோசர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
