மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய என்னென்ன செய்ய வேண்டும்? ரொம்ப ஈஸி..!


ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பல முறைகள் உள்ளன.

முதலில், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ஒரு காசோலை அல்லது வங்கி டிராப்டை இணைத்து, கிளை அலுவலகத்தில், மியூச்சுவல் ஃபண்ட் தனிப்பட்ட முதலீட்டாளர் சேவை மையங்களில் (ISC), அல்லது சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களின் பதிவாளர் அல்லது பரிமாற்ற முகவரிடம் சமர்ப்பிக்கலாம்.

இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களின் இணையதளங்களில் நேரடியாக ஆன்லைனில் முதலீடு செய்யலாம்.

அதற்குறிய நிதி இடைத்தரகரின் மூலம் அல்லது அவரின் உதவியுடன் முதலீடு செய்வதும் உங்கள் விருப்பமாகும். குறிப்பாக, AMFI-யுடன் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரின் மூலம் முதலீடு செய்யலாம், அல்லது நேரடியாக விநியோகஸ்தரின் உதவியின்றி முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் என்பது தனிநபர் அல்லது வங்கி, புரோக்கரிங் நிறுவனங்கள், ஆன்லைன் விநியோகஸ்தர்கள் போன்ற அமைப்புகளாக இருக்கலாம்.

இன்று பாதுகாப்பான முதலீடுகளை உறுதிப்படுத்த தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன, எனவே ஆன்லைன் முதலீடுகளும் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் இருக்கின்றன.


புதியது பழையவை

தொடர்பு படிவம்