இந்தியாவில் ஒரு துறையை ஒட்டுமொத்தமாக மூடும் அமேசான்.. அதிர்ச்சி தகவல்

 இந்தியாவில் ஒரு துறையை ஒட்டுமொத்தமாக மூடும் அமேசான்.. அதிர்ச்சி தகவல்






அமேசான் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகும், சில இந்திய ஊழியர்களுக்கு தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் திட்டம் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில், 'அமேசான் அகாடமி' எனப்படும் அதன் கல்வி செயலியை நிறுத்த முடிவு செய்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தனது கல்வி செயலியின் செயல்பாடுகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் செய்தித்தொடர்பாளர் கூறியபோது,  அமேசான் அகாடமியை நிறுத்த முடிவு செய்துள்ளோம். தற்போதைய வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்வதற்காக நாங்கள் இந்த திட்டத்தை படிப்படியாக முடிக்கிறோம், என்று  கூறினார்.

அமேசான் கல்வி செயலி நேரடி விரிவுரைகள், பதிவுசெய்யப்பட்ட கற்றல் உள்ளடக்கம் மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (JEE) பயிற்சி ஆகியவற்றுடன் தொடங்கியது. மாணவர்களை JEE தேர்வுக்கு தயார்ப்படுத்தவும், அவர்களை வலுப்படுத்தவும், நிபுணத்துவ ஆசிரியர்களுடன் கலந்துரையாடவும், கருத்துகளைக் பகிர்ந்து கொள்ளவும், நேரலைகளில் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் இந்த செயலி உதவியாக இருந்தது.

இந்த நிலையில் அமேசான் கல்வி செயலி மூடப்படுவதால் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

இந்தியாவில் அமேசான் அகாடமியின் செயல்பாடுகள் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் படிப்படியாக நிறுத்தப்படுவதால் தற்போதைய கல்வித் தொகுப்பில் பதிவுசெய்யப்பட்டவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பிச் செலுத்தும்.

2024ஆம் ஆண்டு அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்கு வாடிக்கையாளர்கள் முழு பாடப் பொருட்களையும் ஆன்லைனில் அணுகலாம்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்