ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து டிஸ்னி.. வேலைநீக்க நடவடிக்கையால் ஊழியர்கள் கண்ணீர்!

 ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து டிஸ்னி.. வேலைநீக்க நடவடிக்கையால் ஊழியர்கள் கண்ணீர்!




 பேஸ்புக், டுவிட்டர் உள்பட பல முக்கிய நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது டிஸ்னி நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியபோது புதிதாக பணி அமர்த்தல் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி செலவுகளை குறைக்கும் வகையில் சில பிரிவுகளில் உள்ள ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இது குறித்து அந்தப் பிரிவின் தலைவர்கள் மற்றும் மனிதவள அதிகாரிகள் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் 


வேலை நீக்க நடவடிக்கை மூலம் நாங்கள் நிறுவனத்தின் செலவை குறைக்க திட்டமிட்டு உள்ளோம் என்றும் சில பணியாளர்களை வேலை நீக்க நடவடிக்கையை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் 11 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்தது என்பதும் அவர்கள் அனைவரும் தற்போது வேலையில்லாமல் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் டுவிட்டர் நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் வேலைநீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக ஐடி ஊழியர்களுக்கு இது சோதனையான காலம் என்று கூறப்படுகிறது 


அந்த வரிசையில் தற்போது டிஸ்னி நிறுவனமும் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் உறுதி தன்மை இல்லாமல் வேலை பார்க்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது

பொருளாதார மந்தநிலை பணவீக்கம் மற்றும் அனைத்து நாடுகளின் கரன்சிகள் மதிப்பு குறைவு ஆகியவையே நிறுவனங்களின் நஷ்டத்திற்கு காரணம் என்றும் அதனால் தான் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 


கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் துரதிஸ்டவசமாக கூகுள், மைக்ரோசாப்ட்,  ஃபேஸ்புக் உள்பட முன்னணி நிறுவனங்களே வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்