ஃபேஸ்புக் சி.இ.ஒ பதவியை ராஜினாமா செய்கிறாரா மார்க் ஜூக்கர்பெர்க்?
மார்க் ஜூக்கர்பெர்க் அடுத்த ஆண்டு ராஜினாமா செய்ய உள்ளார் என முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாக வெளியான அந்த செய்தியால் மெட்டா ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மெட்டாவின் தொடர்பு இயக்குனர் ஆண்டி ஸ்டோன் இந்த செய்தியை முழுவதுமான மறுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மார்க் ராஜினாமா செய்ய போவதாக வெளியான தகவலால் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் கவலைகள் எழுப்பிய நிலையில், ஜுக்கர்பெர்க் தனது மெட்டா நிறுவனத்தை இன்னும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்னர் ஜுக்கர்பெர்க் மன்னிப்புக் கேட்டார் என்பது தெரிந்ததே. இது தொழில்நுட்பத் துறையில் இதுவரை இல்லாத மோசமான பணிநீக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
மெட்டாவின் வருவாய் $27.7 பில்லியனாக சரிந்துள்ளதாகவும், இது மூன்றாம் காலாண்டில் (Q3) ஆண்டுக்கு 4 சதவீதம் சரிந்துள்ளதாகவும், இந்நிறுவனம் நிகர வருமானம் $4.395 பில்லியனைப் பதிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும், மெட்டா சிஎஃப்ஓ டேவிட் வெஹ்னர், பணவீக்கம் காரணமாக சில வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் மீண்டும் மெட்டா எழுச்சி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.



