மியூச்சுவல் ஃபண்டில் எப்போது முதலீடு செய்யலாம்?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தொடங்குவதற்கு இந்த காலம் தான் சிறந்தது என்று எதுவுமே இல்லை. பணம் எப்போதெல்லாம் இருக்கிறதோ அப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய சிறந்த காலம் என்பது குறிப்பிடதக்கது.
முதலீடு செய்ய பணம் இல்லாத சமயம் தவிர அனைத்து சமயமும் முதலீடு செய்வதற்கான சிறந்த காலம் என்பது தான் மியூச்சுவல் ஃபண்டின் தாரக மந்திரம் என்பது குறிப்பிடதக்கது.
முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச வயது என்று எதுவும் கிடையாது. ஒருவர் சம்பாதிக்க தொடங்கியவுடன் சேமிக்க தொடங்க வேண்டும் என்பதுதான் பொதுவான விதி. அந்த சேமிப்பை மியூச்சுவல் ஃப்ண்டில் இருந்து தொடங்க வேண்டும் என்பது புத்திசாலித்தனமான முடிவு.
குழந்தைகள் தங்களுடைய பிறந்தநாள் அல்லது விழாக்களின் போது கிடைக்கும் பரிசு பொருள்கள் மற்றும் பணத்தை சேமிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளது.
அதேபோல் மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதற்கு அதிகபட்ச வயது வரம்பு என்று எதுவும் கிடையாது. 6 வயதிலும் தொடங்கலாம், 60 வயதிலும் தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் வெவ்வேறு நோக்கங்களுக்காக பொருத்தமான திட்டங்களை தேர்வு செய்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். சில திட்டங்கள் நீண்ட காலத்திற்கு வளர்ச்சியடையக் கூடியதாக இருக்கும். அதே சமயம் சில திட்டங்கள் குறுகிய காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
நம்முடைய நோக்கம் என்ன? முதலீட்டின் காலம் என்ன? என்பதை தீர்மானம் செய்து அதற்கேற்ற திட்டங்களை தேர்வு செய்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் கண்டிப்பாக நல்ல வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




