மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச்சந்தையில் மட்டும் தான் செய்யப்படுமா?
பெரும்பாலான முதலீட்டாளர்கள் நாம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் தொகையை பங்குச்சந்தையில் மட்டுமே முதலீடு செய்யப்படும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. நாம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் தொகையை பங்குச்சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்யப்படும். ஒரு சில திட்டங்கள் வேறுவகை முதலீட்டிலும் முதலீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் செய்யும் முதலீட்டு தொகைக்கு ஈக்விட்டி என்ற பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு அதிக வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த திட்டம் ரிஸ்க் நிறைந்தது என்பதால் குறுகிய காலத்திற்கு இந்த திட்டம் ஏற்றது அல்ல என்பதையும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பங்குச் சந்தை
மேலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பங்குச் சந்தையில் மட்டுமின்றி அரசாங்க பாண்டுகள், வங்கிகள், அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகளிலும் முதலீடு செய்யப்படும். இவ்வாறு முதலீடு செய்யப்படும் திட்டங்கள் குறைந்த வருமானத்தை தரும் என்றாலும் அபாயம் மிகவும் குறைவாக இருக்கும்.
பிக்சட் டெபாசிட்
ஆனால் அதே நேரத்தில் வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்யப்படுவது உள்பட பல்வேறு திட்டங்களை விட இந்த திட்டங்கள் மிகச் சிறந்தது என்பதும் வரிகள் சலுகை உண்டு என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
ரிஸ்க்
வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பிக்சட் டெபாசிட் முதலீடுகளை விட சிறந்த திட்டங்களை என்பதால் தான் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்கின்றனர். ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் அரசாங்க வங்கிகள், நிறுவனங்கள், பாண்டுகள் போன்ற அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதுவும் நீண்ட காலத்துக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈக்விட்டி
ஈக்விட்டி உள்பட பல்வேறு திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டில் இருப்பதால் நமக்கு எந்த திட்டம் சிறப்பாக இருக்கும்? நாம் செய்யும் முதலீட்டின் தொகை எவ்வளவு? முதலீடு செய்யும் காலம் எவ்வளவு? என்பதை நிதி ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்து நமக்கு ஏற்ற சரியான திட்டத்தை தேர்வு செய்தால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





