இனி டுவிட்டர் மூலமும் பணம் அனுப்பலாம்.. எலான் மஸ்க் அதிரடி திட்டம்

 


இனி டுவிட்டர் மூலமும் பணம் அனுப்பலாம்.. எலான் மஸ்க் அதிரடி திட்டம்





 தற்போதைய டிஜிட்டல் உலகில் கூகுள் உள்பட பல சமூக வலைதளங்கள் மூலம் பணம்  அனுப்பும் வசதி உள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் டுவிட்டரிலும் விரைவில் பண பரிவர்த்தனை செய்யும் அம்சம் உருவாக இருப்பதாக எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.


 இதுகுறித்து எலான் மஸ்க் தனது விளம்பரதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் டுவிட்டரின் பயனாளிகள் விரைவில் பண பரிவர்த்தனை செய்யும் அம்சம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. 


டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக புளுடிக் பயனாளிகள் 8 டாலர் கட்டணம் கட்டவேண்டும் என அவரது அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


டுவிட்டரில் பேமெண்ட்


இந்த நிலையில் அடுத்த கட்டமாக டுவிட்டர் நிறுவனத்தை லாபகரமாக கொண்டு செல்வதற்கு பேமென்ட் வசதி என்ற சேவையை அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இந்த வசதியின் மூலம் டுவிட்டரில் உள்ள பயனாளிகள் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிகிறது.

உரிமை


மேலும் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதற்கான விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரிகிறது, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இது குறித்து உரிமை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

டிஜிட்டல் பரிவர்த்தனை


டுவிட்டர் நிறுவனத்தில் பேமென்ட் வசதி வந்தால் அதில் இருக்கும் புளூடிக் பயனாளிகள் மிகுந்த பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய டிஜிட்டல் உலகில் டிஜிட்டல் மூலம் பணம் அனுப்புவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனமும் பேமென்ட் வசதியை கொண்டு வர இருப்பது அதன் பயனாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







சமூகவலைத்தளங்கள்


ஏற்கனவே பேஸ்புக் ,கூகுள் உள்பட பல சமூக வலைதளங்கள் பேமென்ட் வசதியை அளித்து உள்ளன என்பதும் வாட்ஸ்அப் நிறுவனமும் சமீபத்தில் பேமென்ட் வசதியை கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பேமென்ட் வசதியை டுவிட்டரும் கொண்டு வந்தால் அதன் பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா

பேமென்ட் வசதி டுவிட்டரில் கொண்டுவரப்பட்டாலும் முதல் கட்டமாக அமெரிக்காவில் மட்டும் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் பின்னர் படிப்படியாக இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பேமென்ட் வசதி வரும் என்றும் கூறப்படுகிறது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்