மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது குறித்த விழிப்புணர்வு தற்போது நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் தொகை அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ரிஸ்க் அதிகம் இல்லாதது என்பது மட்டுமின்றி பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீட்டுகளை விட அதிக வருமானம் தரக்கூடியது என்ற நம்பிக்கை தற்போது அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு வங்கி கணக்கு அவசியமா என்பதை பார்ப்போம். மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏதேனும் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மியூச்சுவல் பண்ட் தொடங்க கண்டிப்பாக வங்கி கணக்கு, கேஒய்சி, பான், ஆதார் அட்டை இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
சில நேர்மையற்ற முதலீட்டாளர்களால் பண மோசடிக்காக மியூச்சுவல் ஃபண்டுகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தான் வங்கி கணக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சில மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் வங்கிகளுக்கு பொதுவான தாய் நிறுவனம் இருக்கலாம். அதனால் இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். எனினும் வங்கிகளை ரிசர்வ் வங்கி அமைப்பும், மியூச்சுவல் பண்டுகளை செபி என்ற அமைப்பும் ஒழுங்குபடுத்துகிறது.
பிரபலமான ஒரு வங்கியின் பிராண்ட் பெயரைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-இல் நீங்கள் முதலீடு செய்தால் அந்த வங்கியும், அந்த வங்கியும் மியூச்சுவல் ஃபண்டும் தனித்தனியே செயல்படுகின்றன என்றும் இரண்டும் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதையும் முதலில் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் ஐசிஐசிஐ வங்கியின் மியூச்சுவல் பண்டுக்கும் ஐசிஐசிஐ வங்கிக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வங்கிகளும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட்ஸின் விநியோகஸ்தர்களாக செயல்பட்டு, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஃபண்ட்களை விற்பனை செய்கின்றன. அவர்கள் சந்தையில் கிடைக்கின்ற எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களையும் விற்பனை செய்யாமல் இருக்கலாம் மற்றும் தாங்கள் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் உள்ள ஃபண்ட்களை பரிந்துரைத்திடுவர். இந்த மியூச்சுவல் ஃபண்ட்களை விற்பனை செய்கின்ற, நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியுடன் தொடர்பற்ற மியூச்சுவல் ஃபண்ட்களிலும் உங்களால் முதலீடு செய்ய முடியும்.
மொத்தத்தில் ஒரு வங்கி கணக்கு, பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை இது மூன்றும் இருந்தால் மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.




