மியூச்சுவல் பண்டில் ரிஸ்க் இருந்தால் சமாளிப்பது எப்படி?




ரிஸ்க் என்பது எந்தவொரு முதலீட்டிலும் இருக்கும் என்பதும் ரிஸ்க் இல்லாத முதலீடு என்பதே உலகில் இல்லை என்பதையும் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிக்ஸட் டெபாசிட் செய்த வங்கி கூட திவால் ஆகிவிட்டால் நாம் பிக்சட் டெபாசிட் செய்த தொகை கிடைக்காது என்பதும் அதேபோல் உண்டியலில் காசு போட்டு வைத்திருந்தால் கூட அவை திருடு போக வாய்ப்புள்ளது என்பதும் அதனால் ரிஸ்க் என்பது அனைத்து முதலீட்டிலும் உள்ளது என்பதையும் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 





ஆனால் அந்த ரிஸ்க் வரும் போது அதை எப்படி தவிர்ப்பது என்பதை புத்திசாலித்தனமாக அறிந்து கொள்ள வேண்டியதும் ஒரு முதலீட்டாளருக்கு மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ரிஸ்க் மிகவும் குறைவானது என்றாலும் அதில் ரிஸ்க்கள் இல்லை என்று கூற முடியாது. மியூச்சுவல் ஃபண்டில் உள்ள ரிஸ்கை எப்படி குறைப்பது அல்லது தவிர்ப்பது என்பதை தகுந்த முதலீட்ட ஆலோசர்களுடன் ஆலோசனை செய்து கொள்ள வேண்டியது முதலீட்டாளர்களின் கடமை என்று குறிப்பிடத்தக்கது.


ரிஸ்க்குகள் பல வடிவங்களில் ஏற்படும். நீங்கள் ஒரு நிறுவனத்தின் வாங்க்யிருந்தால்,  பிரைஸ் ரிஸ்க், மார்கெட் ரிஸ்க், கம்பெனி ரிஸ்க் ஆகியவை இருக்கும். மேற்கண்ட ஒரு ரிஸ்க் அல்லது அவற்றின் ஒன்றுக்கு மேற்பட்ட ரிஸ்குகளால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை குறைய வாய்ப்பு உண்டு.

ஆனாலும் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருக்கக்கூடிய ஒரு வழக்கமான போர்ட்ஃபோலியோ, பல சாதகங்களை கொண்டிருக்கும். இதை “பலவகைப்படுத்தல் (டைவர்ஸிஃபிகேஷன்)” என்று கூறலாம். உண்மையில், பலவகைப்படுத்தல் என்ற முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட செக்யூரிட்டீஸின் விலை குறைந்தாலும், அதனால் போர்ட்ஃபோலியோவின் செயல்திறன் பாதிக்கப்படாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமோர் முக்கியமான ரிஸ்க் என்னவென்றால், லிக்விடிட்டி ரிஸ்க் லிக்விடிட்டி ரிஸ்க் என்றால் என்ன? இது ஒரு சொத்தை, ரொக்கமாக மாற்றுவதற்கான எளிமைத்தன்மை ஆகும். ஒரு முதலீட்டாளர் 10 வருட காலம் லாக்-இன் கொண்டு ஒரு முதலீட்டை செய்துள்ளார். ஆனால் அவருக்கு 3வது வருடத்தில் பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது ரொக்கமாக மாற்றுவதிலான பிரச்சினை, அதாவது லிக்விடிட்டி பிரச்சினை எழுகிறது. இந்த சமயத்தில் பணத்தேவைதான் அவரின் முன்னுரிமையாக இருக்குமே தவிர, ரிட்டர்ன்கள் இல்லை. ஒழுங்குமுறை மற்றும் கட்டமைப்பின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்கள் பெரும் லிக்விடிட்டியை வழங்குகின்றன. முதலீட்டையும், அதனைப் பணமாக்குவதையும் எளிமைப்படுத்தும் வகையில் போர்ட்ஃபோலியோக்கள் வடிவமைக்கப்படுகின்றன.

புதியது பழையவை

தொடர்பு படிவம்