Netflix மற்றும் Amazon Prime வீடியோ ஆகியவை இந்தியாவில் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என்பது தெரிந்ததே. இரு நிறுவனங்களும் பயனர்களுக்காக புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தந்து கொண்டிருக்கின்றன. இந்த பிளாட்ஃபார்ம்களில் காட்சிகளை இலவசமாக பார்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
அமேசான் ஏற்கனவே பயனர்களுக்கு 1 மாத இலவச சோதனை சலுகையை வழங்குகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் Netflix மற்றும் Amazon Prime வீடியோக்களை இலவசமாக பார்க்க ஜியோ அல்லது ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வாங்கினால் போதும். போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு பணம் செலுத்துபவர்கள் Netflix மற்றும் Amazon Prime வீடியோவை இலவசமாகப் பெற முடியும்.
ஜியோ திட்டம்: ஜியோவின் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டமானது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோசினிமா மற்றும் ஜியோடிவி ஆகியவற்றுக்கான இலவச அணுகலை தருகிறது. இது வரம்பற்ற கால் அழைப்பு, 100 ஜிபி மொத்த டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை மாதாந்திர அடிப்படையில் ஆதரிக்கிறது. ஜியோ இணையதளத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, ஒருவர் இந்த திட்டத்தில் 3 குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம் மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 5ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும்.
ஏர்டெல் திட்டம்: பயனர்கள் ரூ. 1,199 ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கினால் Netflix அடிப்படை மாதாந்திர சந்தா, 6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், கூடுதல் கட்டணமின்றி 1 வருடத்திற்கு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், ஹேண்ட்செட் பாதுகாப்பு, எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் ஆகியவற்றுக்கான இலவச அணுகலை தருகிறது.
இந்த திட்டம் வரம்பற்ற கால் அழைப்புகள், 240ஜிபி மாதாந்திர டேட்டா, 200ஜிபி வரை ரோல்ஓவர் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
இந்தியாவில், Netflix மொபைல் திட்டம் மாதத்திற்கு ரூ.149, அடிப்படை திட்டத்திற்கு ரூ.199 மற்றும் நிலையான திட்டத்திற்கு ரூ.499 மற்றும் பிரீமியம் திட்டத்திற்கு ரூ.649 என தொடங்குகிறது. Netflix இன் அடிப்படைத் திட்டத்திலிருந்து தொடங்கி, நீங்கள் ஃபோன், டிவி, லேப்டாப் மற்றும் பிற சாதனங்களில் உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும். ரூ.149 திட்டமானது மொபைல்-மட்டும் சந்தாவாகும்.
அதேபோல் Amazon Prime வீடியோ மொத்தம் நான்கு பிரைம் உறுப்பினர் திட்டங்களை வழங்குகிறது. மாதாந்திர சந்தாவின் விலை ரூ. 299 மற்றும் காலாண்டுக்கு (3 மாதங்கள்) ரூ. 599 செலவாகும். வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப்பின் (12 மாதங்கள்) விலை ரூ.1,499. வருடாந்திர பிரைம் லைட் பேக் விலை ரூ.999.
நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசானுக்கு தனித்தனியாக நீங்கள் செலுத்துவதை விட போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஏன் சிறந்த சலுகையை வழங்குகின்றன?
சில நூறுகளை செலுத்துவதன் மூலம் நீங்கள் நிறைய விஷயங்களைப் பெறுகிறீர்கள். உதாரணமாக, ஜியோ போஸ்ட்பெய்டு ரூ.699 திட்டமானது, ரூ.199 மதிப்புள்ள நெட்ஃபிக்ஸ் அடிப்படை திட்டத்தை இலவசமாகவும், ரூ.1,499 மதிப்பிலான அமேசான் பிரைம் வீடியோவை இலவசமாகவும் அன்லிமிடெட் கால்கள், 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் ஒரு மாதத்திற்கு 100ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. Netflix மற்றும் Amazon திட்டமானது தனித்தனியாக உங்களுக்கு மாதத்திற்கு ரூ.1,698 செலவாகும்,
மேலும் நீங்கள் எல்லாவற்றையும் மிகக் குறைந்த விலையில் பெறுகிறீர்கள். ஏர்டெல்லிலும் இதே நிலைதான் இந்த டெலிகாம் நிறுவனம் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவைத் தவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவையும், டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் பல நன்மைகளையும் வழங்குகிறது. எனவே, போஸ்ட்பெய்ட் டீல்கள் மிகச் சிறந்தவை மற்றும் மிகப் பெரிய விலையைச் செலுத்துவதைத் தவிர்க்க உங்களுக்கு நல்ல சலுகையை வழங்குகின்றன.
