திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டத்தின்படி ஆயிரம் ரூபாய் என்பது அனைத்து மகளிருக்கும் கிடைக்காது என்றும் ஒரு சில தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பெற 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும் ஆனால் உச்ச வயது இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே ரூபாய் ஆயிரம் கிடைக்கும் என்றும், சொந்தமாக கார் வைத்திருந்தாலோ அல்லது ஆண்டுக்கு இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தாலும் ஆயிரம் உதவித்தொகை கிடையாது. 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கிடையாது.
சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடையாது. பெண் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


