உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பிற்கு விண்டோஸ் 11 உரிமத்தை வாங்குவது எப்படி?

 


 லேப்டாப் அல்லது டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஓஎஸ் போட்டிருக்க வேண்டும் என்பதும் பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளிகள் விண்டோஸ் ஓஎஸ் தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. தற்போது லேட்டஸ்ட் ஆக வந்துள்ள லிண்டோஸ் 11 என்ற ஓஎஸ்-ஐ உங்கள் புதிய லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் எப்படி நிறுவ வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்



விண்டோஸ் 11 என்பது இரண்டு பதிப்புகளில் வருகிறது. ஒன்று விண்டோஸ் 11 ஹோம் மற்றும் இன்னொன்று விண்டோஸ் 11 ப்ரோ. விண்டோஸ் 11 ஹோம் பொதுவான பயனர்களுக்கு வழங்கப்படும். பெரும்பாலான பயனர்களுக்கு தேவைப்படும் அனைத்து முக்கிய அம்சங்களும் இதில் உள்ளது. விண்டோஸ் 11 புரோ என்பது சில கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. 


விண்டோஸ் 11 மற்றும் விண்டோஸ் 11 ப்ரோ ஆகிய இரண்டுமே மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. மைக்ரோசாப்ட் இணையதளத்தில் விண்டோஸ் 11 ஹோம் ரூ.10,379.00 என்ற விலையிலும் விண்டோஸ் 11 புரோ ரூ.16,515.00 என்ற விலையிலும் கிடைக்கின்றது.


மேலும் விண்டோஸ் 11  இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால் அதில் சில அம்சங்கள் இருக்காது. நீங்கள் பொதுவான பயன்பாட்டிற்கு கம்ப்யூட்டர் பயன்படுத்தினால் இலவச விண்டோஸ் ஓஎஸ்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.  கூடுதல் அமைப்பு, டேட்டா பரிமாற்றம் போன்ற சில அம்சங்கள் இதில் இருக்காது. 

புதியது பழையவை

தொடர்பு படிவம்