மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் எனில், உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு, KYC/CKYC செயல்முறை இருக்க வேண்டும், அதேபோல PAN கார்டு மற்றும் ஆதார் அட்டையும் கட்டாயமாக இருக்க வேண்டும். ஒருசில முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை தவறாகப் பயன்படுத்தி பணமோசடி செய்ய கூடாது என்ற காரணத்தினால் இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சில மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் வங்கிகள் ஒரே நிறுவனத்தை சார்ந்திருப்பதுண்டு. ஆனால், வங்கிகளை ரிசர்வ் வங்கி (RBI) ஒழுங்குபடுத்துகிறது, மியூச்சுவல் ஃபண்ட்களை இந்திய பங்குச் சந்தை வாரியம் (SEBI) ஒழுங்குபடுத்துகிறது.
அதனால், பிரபலமான வங்கியின் பெயரை உடைய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை அணுகும்போது, அவை இரண்டு தனித்தனி நிறுவனங்கள் என்று கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, அந்த வங்கியின் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய நீங்கள் அவ்வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
வங்கிகள் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் விநியோகஸ்தர்களாக இருந்து, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்களை விற்பனை செய்கின்றன.
ஆனால் அவர்கள் ஒப்பந்தம் செய்துக்கொண்ட நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட்களையே விற்பனை செய்வார்கள், மற்ற நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட்களை விற்பனை செய்ய மாட்டார்கள். எனினும், வங்கியுடன் தொடர்பில்லாத மியூச்சுவல் ஃபண்ட்களிலும் நீங்கள் எளிதில் முதலீடு செய்ய முடியும்.
