மியூச்சுவல் ஃபண்டுகளை நேரடியாக முதலீடு செய்யலாமா?

 


உங்கள் KYC முறை முடிந்துவிட்டால் நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் நேரடியாக முதலீடு செய்யலாம். நீங்கள் ஆன்லைனில் பரிவர்த்தனைகள் செய்ய விரும்பினால், அது மிகவும் எளிமையானது. ஆனாலும், உங்களுக்கு ஆன்லைனில் பரிவர்த்தனை செய்வதில் சிரமம் இருப்பின், அருகிலுள்ள கிளையில் சென்று நேரடியாக முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்ய விரும்பும் போது, ஆன்லைன் பரிவர்த்தனைகள் மிகவும் சிறந்த விருப்பமாக இருக்கின்றன. இதன் மூலம், கமிஷன் தொகைகளை மிச்சப்படுத்த முடியும். நீங்கள் எந்தவொரு ஃபண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ, அதன் RTA  தளத்திலோ அல்லது நிதித் தொழில்நுட்ப நிறுவன பிளாட்ஃபார்ம்லோ சென்று முதலீடு செய்யலாம். ஆன்லைன் வழியாக உங்கள் முதலீட்டை மேற்கொள்ளும் போது, பல லாகின்களை நிர்வகிக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் டைரக்ட் பிளானில் முதலீடு செய்யும் போது, உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப பொருத்தமான ஃபண்ட்களை தேர்வு செய்வது, தேவையான போது அடிக்கடி உங்கள் போர்ட்ஃபோலியோவை கண்காணிப்பது ஆகியவை அனைத்தும் உங்கள் பொறுப்பு ஆகும். 

சரியான ஃபண்ட்களை தேர்வு செய்வது மற்றும் உங்கள் போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பது பற்றி அனைவருக்கும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு விவரம் இல்லாததால், டைரக்ட் பிளான் தேர்வு செய்வது திறமையான முதலீட்டாளர்களுக்கே உகந்தது.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குறித்து அதிகம் தெரியாதவர்கள், அவர்களுக்காக டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் முதலீடு செய்வது மிகவும் நல்லது.


புதியது பழையவை

தொடர்பு படிவம்