மியூச்சுவல் ஃபண்ட்கள், அவற்றின் செயல்பாடு, NAV, ரேங்கிங் போன்றவற்றைப் பற்றி நீங்கள் ஆராயும்போது RST, புளூச்சிப் ஃபண்ட், XYZ லார்ஜ் கேப் ஃபண்ட் போன்ற பெயர்களை பார்த்திருக்கலாம். 'புளூசிப்' மற்றும் 'லார்ஜ் கேப்' என்ற வார்த்தைகள் ஒரே பொருளை காட்டும் விதமாக பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இவை இரண்டும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட முக்கியமான லார்ஜ் கேப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களை குறிக்கின்றன.
2017 அக்டோபரில் வெளியிடப்பட்டு, 2018 ஜூனில் அமலுக்கு வந்த SEBI சுற்றறிக்கையில், ஈக்விட்டி ஃபண்ட் வகையின் கீழ் புளூச்சிப் ஃபண்ட்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. இதனால் புளூச்சிப் ஃபண்ட்கள் இல்லை என்றுதானா? இல்லை, புளூச்சிப் என்கிற பெயர் தவிர்க்கப்பட்டாலும், 100 முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்கின்ற ஃபண்ட், லார்ஜ் கேப் ஃபண்ட் என்ற வகையில் வரிசைப்படுத்தப்படும்.
இந்தியாவில் பல நிறுவனங்கள் பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், லார்ஜ் கேப் என்றால் முழு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படையில், முதல் 100 நிறுவனங்களையே குறிக்கிறது. (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்பது = ஒரு பங்கின் விலை * அந்த நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கை).
'புளூச்சிப் ஸ்டாக்குகள்' என்பது பெரும்பாலும் பொருளாதாரத்தில் முக்கியமான, பெரிய நிறுவனங்களை குறிக்கும். லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள் தங்கள் அசெட்டுகளின் 80% வரை இந்த வகை பங்குகளில் முதலீடு செய்கின்றன. அதனால், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்கள் லார்ஜ் கேப் ஃபண்ட்களை 'புளூச்சிப்' ஃபண்ட் என அழைக்கலாம்.
நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, அதன் பெயரை வைத்து குழப்பமடைய தேவையில்லை. அது லார்ஜ் கேப் ஃபண்ட் என்ற வகையில் வருகிறதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். அதன் பிறகு, அதை தேர்ந்தெடுக்க ஆய்வின் அடுத்த படியை முன்னெடுங்கள்.
