டிரம்ப் வெற்றி பெற்றால் இந்திய பங்குச்சந்தை உயருமா? என்ன காரணம்?



இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் மோத உள்ளனர். இவர்களில் ஒருவர் அடுத்த அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவுள்ளார்கள்.


இந்த தேர்தல் உலகம் முழுவதும் கவனமாக கண்காணிக்கப்படுவதுடன், உலகப் பங்குச் சந்தைகளில் இந்த தேர்தலின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


இந்தியா உள்பட பல நாடுகளின் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிவதற்கான முக்கிய காரணமாக, ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் போன்றவற்றை குறிப்பிடலாம்.


போர் மேலும் தீவிரமாக மாறினால், பங்கு சந்தை குறைந்து போக வாய்ப்பு உள்ளது. அதேபோல் போரில் கட்டுப்பாடு வந்தால், பங்குச் சந்தை உயர்ந்திருக்கும் என்பதும் தெளிவாக உள்ளது. ஆகவே, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, இந்த இரண்டு போர்களுக்கும் முடிவை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது.


கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், போர் தொடரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும்,  ஆனால், டிரம்ப் வெற்றி பெற்றால், ஈரான்-இஸ்ரேல் போரை கட்டுப்படுத்த சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்பப்படுகிறது.


ரஷ்யா அதிபர் புதினுடன் டொனால்ட் டிரம்ப் நட்பு உறவில் உள்ளதால், போரை முடிவுக்கு கொண்டுவரவும் அவர் முடியும் என்றும் கூறப்படுகிறது.


போர் முடிவுக்கு வந்தால், இந்திய பங்குச் சந்தை மிகவும் விரைவாக உயரும் என்பதால், டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக வருவது இந்திய பங்கு சந்தைக்கு நல்லது எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர் பதவிக்கு வந்த பிறகு போரை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்