மியூச்சுவல் ஃபண்ட் தொடங்க வங்கிக்கணக்கு அவசியமா? வேறு என்னெல்லாம் தேவை?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பாதுகாப்பானது மட்டுமின்றி மற்ற முதலீடுகளை விட அதிக வருவாய் தரக் கூடியது என்பதால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படும் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஒரு மியூச்சுவல் ஃபண்டை புதிதாக தொடங்க வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தொடங்குவதற்கு வங்கி கணக்கு தேவையா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம். கண்டிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய ஏதேனும் ஒரு வங்கியில் வங்கிக் கணக்கு, பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவை வேண்டும். இந்த மூன்றும் இருந்தால் எளிமையாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாம்.
சில நேர்மையற்றவர்கள் வங்கி கணக்கு இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாம் என்று கூறினால் அதை நம்ப வேண்டாம். இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் கணக்கைத் தொடங்கி கொண்டு அதன் பின்னர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் அணுகினால் உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதற்கான வழிமுறைகளை கூறுவார்கள்
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு வங்கி கணக்கு, ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை ஆகிய மூன்று மட்டுமே இருந்தால் போதும். இதனை வைத்து எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய போகிறோமோ அந்த நிறுவனத்தில் இந்த மூன்று ஆதாரங்களையும் கொடுத்து விட்டால் உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் தொடங்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் KYC. நோ யுவர் கஸ்டமர் என்று கூறப்படும் இதனையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எந்த ஒரு நிதி அமைப்புகளில் கணக்கை தொடங்கினாலும் KYC தேவை என்பது முக்கியமானதாக காணப்படுகின்றது
வாடிக்கையாளரை அடையாளம் காண இந்த KYC பயன்படுத்தப்படுகிறது. இதில் பரிந்துரைக்கப்படும் புகைப்பட அடையாள அட்டையுடன் கூடிய முகவரி சான்று மற்றும் தனிநபர் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கான ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும். KYC உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது






