கூகுள், ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கம்? புதிய ஸ்மார்ட்போனை உருவாக்குவேன் என எலான் எச்சரிக்கை
கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு பதிலாக மாற்று போனை தயாரிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மதிப்பாய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மதிப்பாய்வை அடுத்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் ட்விட்டர் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த எலான் மஸ்க் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இதனை செய்யாது என்று நான் நம்புகிறேன் என்றும் ஒருவேளை அப்படி செய்தால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக புதிய போனை தயாரிப்ப்ர்ர்ன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த எச்சரிக்கை குறித்து பல சமூக வலைதள பயனாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன் களுக்கு நிகரான ஒரு புதிய போனை எலான் மஸ்க் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாக்குவார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர எலான் நிச்சயம் ஒரு புதிய போனை உருவாக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு ட்விட்டர் செயலிய நீக்குவதால் பெரிய அளவில் லாபம் இருக்காது. ஆனால் எலான் மாற்று ஸ்மார்ட்போனை உருவாக்கினால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். இப்படி ஒரு கஷ்டத்தை அவர்களாகவே உண்டாக்கி கொள்வார்களா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




