வெளிநாட்டினர் கனடாவில் நிரந்தரமாக குடியேற புதிய விதிகள்!
கனடா சமீபத்தில் நிரந்தர குடியேற்ற்த்திற்கான புதிய விதியை (PR) நடைமுறைப்படுத்தியுள்ளது
இந்த புதிய விதிகள் ஏற்கனவே பல்வேறு துறைகளில் இருந்து அதிகமான குடியேறியவர்களை உள்ளடக்கும்.
இந்த புதிய விதிகள் மூலம் புதிய திறன்களைக் கொண்ட அதிகமானவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கனடா அரசு கூறியுள்ளது. இதனால் கனடாவில் உள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க உதவும் என கூறப்படுகிறது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் ஃப்ரேசர், அவர்கள் கனடாவின் குடியேற்றத் திட்டங்களுக்கு தேசிய தொழில் வகைப்பாடு (NOC) 2021ஐ செயல்படுத்துவதாக அறிவித்தார்.
“தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க எங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு, கட்டுமானம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகம் உள்ளது.
மேலும் நமது பொருளாதாரத்தை வளமான எதிர்காலத்திற்கு முன்னோக்கி கொண்டு செல்ல நாம் சார்ந்து இருக்கக்கூடிய மிகவும் வலுவான பணியாளர்களை வழங்குவதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் அதிகரிக்கும்.
எனவே முக்கிய தேவையுடைய தொழிலாளர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியேற்றத்திற்காக விரிவாக்கப்பட்ட புதிய விதிகளை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் ஃப்ரேசர் கூறினார்.
செவிலியர் உதவியாளர்கள், நீண்ட கால பராமரிப்பு உதவியாளர்கள், மருத்துவமனை உதவியாளர்கள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் போக்குவரத்து டிரக் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 16 துறைகளில் உள்ளவர்களுக்கு நிரந்தர குடியேற்றப்பதிவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.






