இந்த முக்கிய நகரத்தில் 5ஜி சேவை வழங்குவது ரிலையன்ஸ் மட்டும் தான்!

 இந்த முக்கிய நகரத்தில் 5ஜி சேவை வழங்குவது ரிலையன்ஸ் மட்டும் தான்!




 இந்தியாவில் 5ஜி சேவை சமீபத்தில் தொடங்கியது என்பதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

5ஜி சேவையின் ஏலம் விடப்பட்ட போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தான் அதிக ஏலம் எடுத்தது என்பதும் அதனை அடுத்து ஏர்டெல் அதிகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மற்ற நகரங்களில் விரைவில் தொடங்கப்படும் என தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும் இப்போதைக்கு 5ஜி சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்து இருந்தன என்பதை பார்த்தோம். 

இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றும் நாட்டின் தலைநகரான டெல்லியில் தற்போது 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

டெல்லி என்.சி.ஆர் பகுதியில் 5ஜி சேவை தரும் ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மட்டுமின்றி குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் பிற முக்கிய இடங்கள் உட்பட டெல்லி-என்சிஆர் முழுவதும் True-5G சேவைகளை வழங்கும் ஒரே ஆபரேட்டர் ஜியோ மட்டுமே என்பத் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்