மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதன்: யார் இவர் தெரியுமா?
மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதனை நியமிப்பதாக மெட்டா (முன்னாள் ஃபேஸ்புக்) அறிவித்தது.
2023ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அவர் தனது புதிய பொறுப்பைத் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தியா தேவநாதன் APAC தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பார் என்றும், அவர் இந்தியாவில் மெட்டா நிறுவனத்தை வளர்க்க தனது திறமையை பயன்படுத்துவார் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.
சந்தியா
தேவநாதன்
சந்தியா வணிகங்களை அளவிடுதல், வணிக குழுக்களை உருவாக்குதல், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் ஏற்கனவே சாதனை படைத்துள்ளார்.
மெட்டா இந்தியா
இந்தியாவில் மெட்டாவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”என்று மெட்டாவின் தலைமை வணிக அதிகாரி மார்னே லெவின் கூறினார்.
அர்ப்பணிப்பு
மெட்டாவின் வணிகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும் இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில், அதன் கூட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சேவை செய்வதற்காக நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் முன்னுரிமைகளை ஒன்றிணைப்பதில் தேவநாதன் கவனம் செலுத்துவார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்-வியட்நாம்
2016ஆம் ஆண்டு சந்தியா மெட்டாவில் சேர்ந்தார். சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் வணிகங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மெட்டாவின் இ-காமர்ஸ் வணிகங்களை உருவாக்க சந்தியா உதவினார்.
சந்தியா தேவநாதன் ஆந்திர பல்கலைக்கழகத்தில் பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்று அதனை அடுத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் மேனேஜ்மென்ட் பட்டம் பெற்றார். 2014ஆம் ஆண்டு அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவநாத் துக்ரா
வாட்ஸ்அப்பின் இந்திய தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்தியாவில் உள்ள மெட்டா பிளாட்பார்ம்ஸ் பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில் வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு 'பொது கொள்கை இயக்குனராக' தற்போது பணியாற்றி வரும் சிவநாத் துக்ரா, இனி மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் 'பொது கொள்கை இயக்குனராக பணிபுரிவார் எனவும் மெட்டா அறிவித்துள்ளது.





