மத்திய அரசு வெளியிடும் தங்கப்பத்திரங்கள்: சாதகங்கள் என்னென்ன? பாதகங்கள் என்னென்ன?

 மத்திய அரசு வெளியிடும் தங்கப்பத்திரங்கள்: சாதகங்கள் என்னென்ன? பாதகங்கள் என்னென்ன?



 தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமின்றி நீண்ட காலத்திற்கு நல்ல வருவாய் கொடுக்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தங்கம் விலை ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருமானம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு தங்கம் இதுவரை நஷ்டத்தை கொடுத்ததாக சரித்திரமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கம்


அதேபோல் தங்கம் என்பது ஆபரண பொருளாகவும் பயன்படுவதால் இந்தியர்கள் மிகவும் விருப்பமான ஆபரண தங்கத்தை வாங்கி அதைப் பயன்படுத்தியும் முதலீடாகவும் வைத்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கப்பத்திரம்


இந்த நிலையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தங்கப் பத்திரத்தை வெளியிட்டு வருவதை அடுத்து அதில் முதலீடு செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


பொதுமக்கள் தங்கள் மகன் மற்றும் மகளின் எதிர்காலத்திற்காக தங்கப்பத்திரத்தில் சேமித்து வைக்கும் பழக்கம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம்


டிஜிட்டல் கோல்டு என்று கூறப்படும் சாவரின் கோல்டு ஃபண்ட் என்பதுதான் இந்த தங்க பத்திரம். இதனை வாங்கியவர்களுக்கு ஐந்து வருடங்களில் 80 சதவீதம் லாபம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தான் இதில் முதலீடு செய்ய அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


டீமேட்


குறைந்தபட்ச ஒரு கிராம் அதிகபட்சம் 4 கிலோ என தங்க பத்திரங்களை ஒருவர் வாங்க முடியும். இதை வாங்குவதற்கு ஆதார் அட்டை எண், சேமிப்பு கணக்கு, வங்கிக் கணக்கு இருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் இந்த தங்கத்தை வாங்கலாம் என்பதும் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் பங்குச் சந்தை மூலமாகவும் இதனை வாங்கலாம்,

பங்குச்சந்தை


 பங்குச்சந்தையில் தங்கப்பத்திரத்தை வாங்கினால் எப்போது வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் இந்த தங்க பத்திரத்தின் முதிர்வுகாலம் 8 ஆண்டுகள் ஆகும். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பத்திரத்தை திருப்பி கொடுத்துவிட்டு முதலீட்டை எடுத்துக் கொள்ளும் வசதியும் உண்டு. 


முதிர்வு


முதிர்வின்போது தங்கம் விலைக்கு ஏற்ப நமது முதலீடு பணமாக் திரும்ப கிடைக்கும் என்பது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் நாம் செய்ய  முதலீட்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும் என்பதால் இதில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 


பாதுகாப்பு


மேலும் இந்த முதலீட்டை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. திருட்டு பயம் இல்லை, லாக்கர் தேவையில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தங்கத்தை சேமிப்பு என்பது ஆத்திர அவசரத்துக்கு அதை பயன் படுத்தும் நோக்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். திடீரென ஒரு செலவு வந்துவிட்டால் உடனே நம் கையில் இருக்கும் தங்கத்தை அடகு கடையில்  அல்லது வங்கியில் லோன் பெற்றுக்கொள்ளலாம்.

பணம்


அதுமட்டுமின்றி முதிர்வு காலத்தின் போது நம்முடைய முதலீட்டிற்கான தங்கத்தின் மதிப்பிலான பணம் தான் நமக்கு கிடைக்குமே தவிர மத்திய அரசு தங்கம் கொடுக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். 

நல்ல பயன்


தங்க பத்திர திட்டம் என்பது நல்ல திட்டமாக இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் நாம் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை குறைந்த அளவு செய்கூலி சேதாரம் உள்ள நாணயமாக வாங்குவதிலும் நல்ல பயன் உண்டு. அதனை நாம் எப்போது வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 









நிதி ஆலோசகர்கள்


ஒவ்வொருவரும் தங்களது நிதி ஆலோசகர்களின் ஆலோசனை கேட்டு தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாமா அல்லது தங்கத்தை நேரடியாக கடையில் வாங்கி கொள்ளலாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்