என்ன தான் நடக்குது தங்கம் விலையில்? இன்று மீண்டும் உயர்வு!
தங்கம் என்பது இந்தியர்களின் வழக்கமான சேமிப்புகளில் ஒன்று என்பதும் தங்கம் வாங்குவதில் இந்தியர்களை ஜெயிக்க யாராலும் முடியாது என்பதும் தெரிந்ததே.
தங்கம் என்பது ஆபரண அலங்காரமாக மட்டுமின்றி சேமிப்பாகவும் இருப்பதால் ஆத்திர அவசரத்துக்கு தங்கத்தை அடகு வைத்து செலவுக்கு பணம் கிடைக்கும் வசதி இருப்பதால் தங்கத்தை வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர்.
அமெரிக்க சந்தை
அந்த வகையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் அமெரிக்க கமாடிட்டி சந்தையில் தங்கத்தின் விலை உச்சத்தை சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய தங்கம் விலை
நேற்றைய விலையில் இருந்து இன்று ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 4960.00 ரூபாய் விற்பனையாகி வருகிறது. அதே போல ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.39,680 என்று விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வந்தாலும் இன்று நேற்றைய விலையில் இருந்து ஒரு ரூபாய் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலை சென்னையில் இன்று ஒரு கிராமத்தில் ரூபாய் 67.50 என்றும் ஒரு கிலோ ரூ.67500 என்றும் விற்பனையாகி வருகிறது.
ஏழை எளியவர்கள்
தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,000 ரூபாயையும் ஒரு பவுன் 40 ஆயிரம் ரூபாயையும் நெருங்கி வருவதால் தங்கத்தை இனி ஏழை எளிய மக்கள் வாங்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு
தங்கத்தின் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






