லோன் வாங்கி சொந்த வீடு வாங்கலாமா? என்னென்ன பிரச்சனை வரும்?
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்தாலும் சொந்த வீடு வாங்கி விட்டு அதன்பிறகு சிக்கலில் மாட்டி உள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
லோன்
வீடு மட்டுமின்றி எந்த ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றாலும் கையில் மொத்தமாக பணம் இருந்தால் மட்டுமே அது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். லோன் வாங்கி வீடு உள்பட மற்ற பொருட்கள் வாங்கினால் ஏகப்பட்ட சிக்கல் ஏற்படும் என்பதையும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தவணை
ஒருவர் 30 லட்ச ரூபாய் பெருமான வீட்டை வெறும் மூன்று லட்ச ரூபாய் மட்டும் முன்பணம் கட்டி விட்டு மீதமுள்ள 27 லட்ச ரூபாய்க்கு அவர் வங்கி லோன் வாங்கினால் மாதம் 30 ஆயிரம் வீதம் அவர் 30 வருடங்கள் கட்டவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நஷ்டம்
மாதம் 30 ஆயிரம் ரூபாய் என அவர் வீட்டிற்காக மாதத் தவணை கட்டினால் ஒரு வருடத்திற்கு சுமார் 35 இலட்சம் கட்ட வேண்டும் என்பதும் 30 வருடத்துக்கு அவர் சுமார் ஒரு கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக முப்பது லட்சம் உள்ள ஒரு வீட்டை அவர் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதால் அவருக்கு சுமார் 70 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட்
மாதம் 30 ஆயிரம் கொடுத்து வீடு வாங்குவதற்கு பதிலாக 30 ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட சிறந்த முதலீடுகளில் முதலீடு செய்தால் பத்து அல்லது பதினைந்து வருடத்தில் மொத்த தொகையை செலுத்தியே அந்த வீட்டை நாம் ரொக்கமாக கொடுத்து வாங்கி விடலாம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் .
ஆபத்து
மேலும் தவணை முறையில் வீடு வாங்குவதில் உள்ள இன்னொரு ஆபத்து என்னவெனில் எதிர்பாராதவிதமாக வேலை இழப்பு ஏற்பட்டால் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் மாதத் தவணையை கட்ட முடியாத நிலை வரலாம். அப்போது மீதமுள்ள மாதத் தவணை கட்டவில்லை என்றால் வீடு ஏலத்திற்கு போகும் என்றும் நாம் அதுவரை கட்டிய பணம் பறி போக வாய்ப்பு உள்ளது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
முழுத்தொகை
எனவே வீடு வாங்க விருப்பம் உள்ளவர்கள் முழு தொகையையும் செலுத்தி வாங்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 75 சதவீதம் பணத்தை கட்டிவிட்டு வெறும் 25% மட்டும் லோன் வாங்கினால் மீதமுள்ள பணத்தை கட்டுவது எளிதாக இருக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
தவணை முறையில் வீடு வாங்கினால் அது உங்களது சொந்த வீடு என்று நீங்கள் நினைத்துக் கொள்ள முடியாது. கடைசித் அவனை முடியும் வரை அது வங்கியின் வீடு தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சில தவணைகள் கட்டாமல் இருந்தால் கூட வங்கி நடவடிக்கை எடுக்கும் என்பதால் சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டு இருக்கிற பணத்தை இழந்து விடக்கூடாது.
வாடகை வீடு
மேலும் ரூ 50 லட்சம் ரூபாய் கொடுத்து வீடு வாங்குவதற்கு பதிலாக அந்த பணத்தை மொத்தமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டி கிடைக்கும். அதில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் இருந்து விட்டால் மீதம் 40 ஆயிரம் ரூபாய் நமக்கு மிச்சமாகும் என்பது குறிப்பிடதக்கது.
ரியல் எஸ்டேட்
வீட்டின் விலை கடந்த 2010 ற்குப் பிறகு பெரிய அளவில் உயரவில்லை என்பதால் எதிர்காலத்தில் வீட்டின் விலை உயரும் என்று எதிர்பார்ப்பதும் தவறான அணுகுமுறை ஆகும். ரியல் எஸ்டேட் துறை தற்போது மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதால் வீடு நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வதால் நீண்ட காலத்திற்கு பெரிய லாபத்தை கொடுக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிதி ஆலோசகர்கள்
எனவே சொந்த வீடு வாங்கியே தீர வேண்டும் என்று முடிவு செய்தால் முழு பணத்தையும் கொடுத்து வாங்குங்கள். லோன் வாங்கி வீடு வாங்க வேண்டாம் என்பதே சரியான நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





