அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் கூறப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அஜித்தே கோடி கணக்கில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
அஜீத்தின் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் துணிவு படத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறப்பட்டிருந்ததாக அஜித்துக்கும் இயக்குனர் எச் வினோத்துக்கும் கண்டனங்கள் குவிந்தன. ஆனால் எச் வினோத் தரப்பில் இருந்து கூறப்பட்ட தகவலின் படி மியூச்சுவல் ஃபண்டில் முறைகேடு செய்ய முடியாது என்பது தவறான தகவல் என்றும் இதற்கு முன் மியூச்சுவல் பண்டில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் youtube இல் பிரபலமான பொருளாதார நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் தான் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த கூறிய காட்சி படத்தில் இணைக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தபடி மியூச்சுவல் ஃபண்டில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்றும் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் அந்த முறைகேட்டை செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது முழுக்க முழுக்க முறைகேடு என்று நாங்கள் சொல்ல வரவில்லை என்றும் அதில் முறை நடக்கவும் வாய்ப்புள்ளது என்பதை மட்டுமே சொல்ல வந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த அஜித்தே கோடிக்கணக்கில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகிய்ள்ளது. அஜித் மட்டும் என்று விஜய் உள்பட பல முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளதாகவும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பு என்பதை உணர்ந்துதான் அவர்கள் இந்த முதலீட்டை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமல்ல, எந்த ஒரு முதலீட்டு திட்டத்திலும் ஒரு சிறு அளவு முறைகேடு நடக்கத்தான் செய்யும் என்றும் அதை கண்காணிக்கத் தான் செபி உள்ளிட்ட அமைப்பு உள்ளது என்றும் அதனால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதில் எந்தவிதமான தயக்கமும் பொதுமக்கள் காட்ட வேண்டாம் என்றும் ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்க்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மியூச்சுவல் பண்டு முதலீடு என்பது பாதுகாப்பானது என பொருளாதார ஆலோசகர்கள் உறுதிபட கூறியுள்ளதை அடுத்து தாராளமாக பொதுமக்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம் என்றும் அஜித்தே முதலீடு செய்திருக்கும்போது அஜித் ரசிகர்கள் உள்பட பொதுமக்கள் முதலீடு செய்ய அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.



