அதானி பங்குகள் இறங்கியும் எல்.ஐ.சிக்கு கோடிக்கணக்கில் லாபம்.. உண்மை இதுதான்!




 கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் இறங்கியதன் காரணமாக அதில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 


குறிப்பாக அதானி நிறுவனத்தில் நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்ததாகவும் அதனால் எல்.ஐ.சிக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் இது எல்ஐசிக்கு நிறுவனத்திற்கு உண்டான நஷ்டம் இல்லை என்றும் அதில் பாலிசி போட்ட பாலிசிதாரர்களுக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 


எல்ஐசி என்பது பொதுமக்களின் நிறுவனம் என்பதால் அதில் கிடைக்கும் லாபமும் பாலிசி எடுத்தவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்றும் இதனால் பாதிக்கப்பட போவது பாலிசிதாரர்கள் தான் என்றும் பாலிசிதாரர்களுக்கு தங்களது முதிர்வுத்தொகை சரியாக வராது என்றும் சிலர் யூடியூப் உள்பட சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர். 

ஆனால் இதெல்லாம் உண்மையா என்பதை பார்த்தால் துளியும் உண்மை நிலை என்பது தான் விவரம் அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது. எல்ஐசிக்கு நஷ்டம் என்பது சிரிக்க மட்டுமே உதவும் தகவல் என்றும் அதானி நிறுவனத்தின் பங்குகள் ஒரு ரூபாய் என இறங்கினால் கூட அதில் முதலீடு செய்துள்ள எல்ஐசிக்கு நஷ்டம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்


ADANI TOTAL GAS என்ற நிறுவனத்தின் பங்கின் விலை கடந்த கடந்த 2018ஆம் ஆண்டு  63 ரூபாய் என்ற விலையில் எல்.ஐ.சி வாங்கியது. 2018 டிசம்பர் முடிய எல்.ஐ.சி கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை 19,57,05,645


2019ஆம் ஆண்டு ATGL பங்கின் விலை 110. 2019ஆம் ஆண்டு டிசம்பர் முடிய எல்.ஐ.சி கையில் ATGL  பங்கின் மொத்த எண்ணிக்கை 23,69,04,353

2020 ATGL பங்கின் விலை 370. 2020 டிசம்பர் முடிய எல்.ஐ.சி கையில் இருந்த ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை 22,87,62,317. அதாவது 2019ஆம் ஆண்டிலேயே ATGL பங்கை எல்.ஐ.சி வாங்குவதை நிறுத்தி விட்டு விற்க ஆரம்பித்து விட்டது. 


2021ஆம் ஆண்டு ATGL பங்கின் விலை 1872. 2021 டிசம்பர் முடிய எல்.ஐ.சி கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை 20,95,27,194


2022 ATGL பங்கின் விலை 4000. 2022 டிசம்பர் முடிய எல்.ஐ.சி கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை 19,75,26,194


ATGL நிறுவனத்தின் கிட்டத்தட்ட 4 கோடி பங்குகளை எல்.ஐ.சி விற்றுள்ளது. சராசரியா ஒரு பங்கு 2ஆயிரம் என இருந்தாலே கிட்டத்தட்ட எல்.ஐ.சி மொத்த முதலீட்டை மூன்று மடங்காக எடுத்து விட்டார்கள். அதனால் தற்போது  கையில் இருக்கும் பங்குகள் எல்லாம் 1ரூபாய் ஆனால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டம் இல்லை என்பது உண்மை. 


எனவே அதானி பங்குகளை வாங்கியதால் எல்.ஐ.சிக்கு நஷ்டம் என மோடி மீது வெறுப்பால் பொருளாதார வல்லுனர்கள் என்ற பெயரில் இருக்கும் போலியவாதிகளின் பொய்களை யாரும் நம்ப வேண்டாம். எல்.ஐ.சி இன்று வரை லாபமுள்ள ஒரு நிறுவனமாகத்தான் இயங்கி வருகிறது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்