மியூச்சுவல் பண்ட்-இல் ரிஸ்க் உள்ளதா? இருந்தால் குறைப்பது எப்படி?

 





எந்த ஒரு முதலீட்டிலும் ரிஸ்க் என்பது இல்லாமல் இருக்காது என்பதும் ரிஸ்க் இருந்தாலும் அதை சமாளித்து நமது முதலீட்டை எப்படி பெருக்க வேண்டும் என்பதை நமது பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்து நமது முதலீட்டை தொடர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


நாம் மிகவும் பாதுகாப்பானது என்று நினைக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் கூட சில சமயம் ரிஸ்க் ஆகி விடும் என்பதும் நாம் பிக்சட் டெபாசிட் செய்த வாங்கி திடீரென திவால் ஆகி விட்டால் நம்முடைய முதலீட்டுக்கு ஆபத்து என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே ரிஸ்க் இல்லாத முதலீடே இல்லை என்பது தான் உண்மை.

அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒரு சில ரிஸ்க் இருந்தாலும் அந்த ரிஸ்க்கை சமாளித்து எப்படி நமது முதலீட்டை பெருக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 


மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு என்பது பலவித வடிவங்களில் உண்டு. உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால், அந்த பங்கு திடீரென சரியவோ அல்லது வீழ்ச்சி அடையவோ வாய்ப்பு உண்டு. நிறுவனத்தின் கட்டமைப்பு அல்லது போர், கொரோனா பரவல் போன்ற காரணங்களால் அந்த நிறுவனத்தின் பங்கு திடீரென குறையலாம் அல்லது வீழ்ச்சி அடைய லாம். 

ஆனாலும் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருக்கக்கூடிய வழக்கமான போர்ட்போலியோ பல செக்யூரிட்டிகளை கொண்டிருக்கும். இதை பல வகைப்படுத்தல் அதாவது டைவர்சிஃபிகேஷன் என்று அழைக்கலாம். டைவர்சிஃபிகேஷன் என்பது ஒரே நிறுவனத்தில் மொத்தமாக முதலீடு செய்யாமல் பலவகை நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்வதாகும். எந்த நிறுவனத்திற்கு என்ன ஆகும் என்பதை நாம் ஊகிக்க முடியாது என்பதால் பல நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்தால், ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிந்தாலும் மற்ற நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து நமக்கு லாபத்தை கொடுக்கும்.


நாம் கவனமாக கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் லிக்விடிட்டி. லிக்விடிட்டி என்றால் என்ன என்பதை தற்போது பார்ப்போம். நாம் ஒரு வீடு அல்லது நிலம் வைத்திருந்தால் அதை ரொக்கமாக மாற்றுவது மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் ஒரு முதலீட்டாளர் பத்தாண்டு காலத்திற்கு ஒரு முதலீட்டை லாக் செய்திருந்து, அவருக்கு திடீரென மூன்றாவது வருடத்தில் அல்லது ஐந்தாவது வருடத்தில் பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொண்டால் இப்போது அதை ரொக்கமாக மாற்றுவதில் பிரச்சினை இருக்கும். அதாவது லிக்விடிட்டி பிரச்சனை எழுகிறது.

ந்த சமயத்தில் முதலீட்டாளருக்கு பணத்தேவை தான் முன்னுரிமையாக இருக்குமே தவிர அவருடைய முதலீட்டில் கிடைத்த லாபம் கவனத்தில் இருக்காது. எனவே திடீரென பணம் தேவை ஏற்படும் என்று ஊகித்தால் சில தொகைகளை குறைந்த கால முதலீட்டில் நாம் முதலீடு செய்திருந்தால், பணத்தேவையின்போது நீண்ட கால முதலீட்டில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


எனவே நமது மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் அவ்வப்போது தேவைப்படும் பணத்திற்காக சில குறுகிய கால முதலீடுகளையும் நீண்ட காலத்தின் அடிப்படையில் நல்ல லாபம் பெறுவதற்காக சில முதலீடுகளையும் பிரித்து முதலீடு செய்யவேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்