டிகிரி எல்லாம் தேவையில்லை.. கைநிறைய சம்பளத்துடன் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு..!

 எந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் பட்டப்படிப்பு வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது தற்போது கல்வியை விட திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.


2030ஆம் ஆண்டிற்குள் பெரும்பாலான புதிய வேலைகளுக்கு இளங்கலை பட்டம் தேவையில்லை என்று தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.  இதுகுறித்து  LinkedIn இணையதளத்தில் 2021 மற்றும் 2023 க்கு இடையில் பட்டதாரிகளை விட அனுபவம் வாய்ந்தவர்கள் அதிக வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


இந்த LinkedIn அறிக்கையின்படி, 'இளங்கலை அல்லாத பட்டதாரிகள்' என வகைப்படுத்தப்பட்ட நபர்கள் உயர்நிலைப் பள்ளி முடித்தவர்கள், அசோசியேட் பட்டம் பெற்றவர்கள் அல்லது தொழில் சார்ந்த பயிற்சியைப் பெறுவதற்கான பயிற்சித் திட்டத்தை முடித்தவர்கள் அதிக வேலையை பெற்று வருகின்றனர்.



இளங்கலைப் பட்டம் தேவையில்லாத வேகமாக வளர்ந்து வரும் வேலைகள் இஒதோ: 


1. கன்சல்டிங்: 2021 முதல் 2022 வரை இந்த பணியில் அமர்த்துவதில் 34% அதிகரித்துள்ளது. கிளையன்ட் ஆலோசகர்கள், வணிக ஆலோசகர்கள் அல்லது தீர்வுகள் ஆலோசகர்களாக இருந்தால் இந்த வேலை கிடைக்கும்.


2. மார்க்கெட்டிங்: சந்தைப்படுத்தல் தொழில் இளங்கலை அல்லாத பட்டதாரிகளுக்கு கிடைக்கிறது.   


3. ரிசர்ச்: விஞ்ஞான நாட்டங்கள் உள்ளவர்களுக்கு ஆராய்ச்சி துறையில் நம்பிக்கைக்குரிய வழிகளை வழங்குகின்றன.


ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிக ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சோதனைகளை நடத்துதல், தரவுகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.


4. HR: மனிதவள மேம்பாட்டு பணிக்கு தகவல் தொடர்பு மற்றும் தலைமைத்துவம் போன்ற திறமை முக்கியம்.  


5. மீடியா: ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு உலகம் இளங்கலை அல்லாத பட்டதாரிகளுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது.


கடந்த சில ஆண்டுகளாக வேலைச் சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் இளங்கலை பட்டம் பெற்றால் மட்டும் வேலை கிடைக்காது. அனுபவம் மற்றும் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்..

புதியது பழையவை

தொடர்பு படிவம்