HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு கிரெடிட் கார்டுகளை வழங்கி வரும் நிலையில் தற்போது மற்றொரு கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிக கேஷ்பேக் சலுகை உள்ளது.
Amazon மற்றும் Flipkart தளத்தில் ஷாப்பிங் செய்தால் அல்லது Zomato மற்றும் Swiggy தளத்தில் உணவுகளை ஆர்டர் செய்தால், HDFC பேங்க் மில்லினியம் கிரெடிட் கார்டு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த கார்டில் காண்டாக்ட்லெஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கார்டை ஸ்வைப் செய்ய தேவையில்லை. அதாவது பிஓஎஸ் இயந்திரத்தைத் தொடுவதன் மூலம் கார்டை ஸ்வைப் செய்யாமல் பணம் செலுத்தலாம்.
HDFC வங்கி மில்லினியம் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் கூடுதலாக பலன்கள் கிடைக்கும். அதேபோல் ஆஃப்லைனில் வாங்குதல், இலவச லவுஞ்ச் அனுமதி, பரிசு வவுச்சர்கள் மற்றும் பிற சலுகைகளுக்கு 1% கேஷ்பேக் வழங்குகிறது.
Amazon, Flipkart, BookMyShow, Cult.fit, Myntra, Sony LIV, Swiggy, Tata CLiQ, Uber மற்றும் Zomato ஆகியவற்றில் செலவழிப்பதன் மூலம் மில்லினியம் கிரெடிட் கார்டு மூலம் 5% கேஷ்பேக் புள்ளிகளைப் பெறலாம். ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும், இந்த வகையில் அதிகபட்சமாக ரூ. 1000 வெகுமதி வழங்கப்படும்.
எரிபொருள், வாடகை மற்றும் அரசு கடன்களை செலுத்துதல் தவிர, அனைத்து செலவுகளும் 1% கேஷ்பேக் புள்ளிக்கு தகுதி பெறும். இந்த வகையிலும் ஒவ்வொரு பில்லிங் சுழற்சியிலும் அதிகபட்சமாக ரூ.1000 வெகுமதி வழங்கப்படும்.
மில்லினியா கிரெடிட் கார்டுக்கான தகுதி அளவுகோல்கள்:
இந்த கிரெடிட் கார்டு பெற சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களாக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது முறையே 21 மற்றும் 40 ஆக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.35,000 மாத மொத்த சம்பளம் உள்ள பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் உள்ள சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு கிடைக்கும்.
