சென்னை ஐஐடியில் இலவச AI படிப்பு.. விண்ணப்பம் செய்வது எப்படி?

 AI டெக்னாலஜி தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்த டெக்னாலஜியை குறித்து தெரிந்து கொள்வதற்காக இது குறித்த படிப்புகளை பலர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ஐஐடி இலவசமாக ஆன்லைன் மூலம் AI டெக்னாலஜி படிப்பை சொல்லித் தருகிறது.  இந்த படிப்புக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பதை தற்போது பார்ப்போம்



 முதல் கட்டமாக https://swayam.gov.in/  என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள் அதில் போய் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். அதில்  எந்த கோர்ஸ் நீங்கள் படிக்க வேண்டும் என்பது குறித்த அனைத்து வகையான படிப்பின் பிரிவுகளும் இருக்கும். இதில் நீங்கள் AI சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க வேண்டும் என்றால் அந்த AI என்ற பிரிவை தேர்வு செய்யவும்.  


மேலும் இந்த படிப்பு எந்தெந்த  கல்வி நிலையங்களில் சொல்லித் தரப்படுகிறது என்ற விவரமும் இருக்கும், அதில் நீங்கள் ஐஐடி சென்னை என்பதை தேர்வு செய்யவும்.  அதன் பிறகு அதில் நீங்கள் விண்ணப்பத்தின் விவரங்களை நிரப்பினால் போதும் நீங்கள் இலவச ஆன்லைன் கோர்ஸில் இணைக்கப்படுவீர்கள். 


இந்த படிப்புக்கு  உங்களுக்கு சான்றிதழ் தேவை என்றால் ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணம் கட்ட வேண்டும் நீங்கள் வெளியே இந்த படிப்புகளை படித்தால் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இங்கு  கோர்ஸ் இலவசம் என்றாலும் சான்றிதழ் வகைக்காக மட்டும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

ஒருவேளை உங்களுக்கு சான்றிதழ் தேவையில்லை கோர்ஸ் படித்தால் மட்டும் போது என்று நீங்கள் முடிவு செய்தால் இந்த ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் உங்களுக்கு தரப்போகும் சான்றிதழில் சென்னை ஐஐடி என்று குறிப்பிடப்பட்டு கிடைக்கும் என்பதால் பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும்போது இந்த சான்றிதழ் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

https://www.kaasupanamthuttu.com/2023/07/chennai-iit-ai-courses-online.html

AI டெக்னாலஜி படிப்பு மட்டுமின்றி இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட படிப்புகளும் பிற துறை சம்பந்தப்பட்ட படிப்புகளும் ஆன்லைன் மூலம் இதில் இலவசமாக படித்தது கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

புதியது பழையவை

தொடர்பு படிவம்