பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 500 கோடி ரூபாய் சொத்து மதிப்பு வைத்திருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் தீபிகா படுகோனின் நிகர மதிப்பு சுமார் 60 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ. 498 கோடி இருக்கும் என மதிக்கப்பட்டுள்ளது. அவர் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் அவரது திரைப்படங்கள், பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் வணிக முயற்சிகள் மூலம் நிறைய பணம் சம்பாதித்துள்ளார்.
தீபிகா படுகோனே ஒரு படத்திற்கு ரூ.15 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார். "பத்மாவத்", "சென்னை எக்ஸ்பிரஸ்" மற்றும் "பிகு" உட்பட சமீபத்திய ஆண்டுகளில் பாலிவுட் ஹிட்களில் சிலவற்றில் அவர் நடித்துள்ளார்.
பெப்சி, லோரியல் மற்றும் டைட்டன் உள்ளிட்ட பல பெரிய பிராண்டுகளுக்கு தீபிகா பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.8 கோடி வரை சம்பளம் கிடைக்கின்றதாம்.
தீபிகா கா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும், 82 ஈஸ்ட் என்ற தோல் பராமரிப்பு நிறுவனத்தையும் தீபிகா வைத்திருக்கிறார். மேலும் அவர் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் தீபிகாவின் நிகர மதிப்பு கணிசமாக வளர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு அவரது நிகர மதிப்பு சுமார் $40 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. அவரது சமீபத்திய படங்களான, "சபாக்" மற்றும் "கெஹ்ரையன்", விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்துள்ளது. இது அவரது பிராண்ட் மதிப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்க உதவியது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாலிவுட்டில் கரீனா கபூருக்கு பிறகு தீபிகா படுகோனே இரண்டாவது பணக்கார நடிகை ஆவார். அவர் ஒரு வெற்றிகரமான நடிகை, தொழிலதிபர் ஆவார்.


