இன்ஸ்டாகிராம் Threads அக்கவுண்ட் ஓப்பன் செய்வது எப்படி?

 ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ள Threads இன்று முதல் இயங்கும் நிலையில் அதில் எப்படி அக்கௌன்ட் ஓபன் செய்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம். 

தற்போது சமூக வலைதளங்கள் ஒன்றுக்கொன்று போட்டியில் இருக்கும் நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட பல போட்டியில் உள்ளது என்பது தெரிந்ததே.


அந்த வகையில் மெட்டா நிறுவனம் ஏற்கனவே பேஸ்புக் இன்ஸ்டாகிராமை அடுத்து Threadsஎன்ற சமூக வலைதளத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இது ட்விட்டருக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டதாகவே தெரிகிறது. ஏனெனில் ட்விட்டரில் மட்டும் தான் புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செய்தி மற்றும் டெக்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதனால் தான் ட்விட்டரை கிட்டத்தட்ட அனைத்து செய்தி மீடியாவும் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


அந்த வகையில் Threads இனிமேல் செய்தி மீடியாக்கள் மத்தியில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமூகவலைதளத்தில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருந்தால் ஆட்டோமேட்டிக்காக Threads அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்

இதில் 500 கேரக்டர்கள் வரை செய்தியை பதிவு செய்யலாம் என்பதும் அது மட்டும் இன்றி ஐந்து நிமிட வீடியோக்கள் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ட்விட்டரில் இருப்பது போலவே லைக், கமெண்ட், ஷேர், ஃபார்வேர்ட் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Threads செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு ப்ளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் இருந்தால், அதன் மூலம் Threads அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் Threads அக்கவுண்ட் ஓபன் செய்தவுடன் இன்ஸ்டாகிராமுக்கு வரும் ரெக்யூஸ்ட்டை அப்ரூப் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

ஒருவேளை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இல்லை என்றாலும் புதிதாக Threads அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் உள்ள ப்ரோபைல் பெயர், ப்ரொபைல் பிக்சர்ஸ் ஆகியவை தானாகவே Threads அக்கவுண்டுக்கு வந்து விடும். ஒருவேளை நீங்கள் அதை மாற்ற வேண்டும் என்றாலும் அதில் ஆப்ஷன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ட்விட்டருக்கு போட்டியாக வந்துள்ள Threads ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் பயனாளர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புதியது பழையவை

தொடர்பு படிவம்