4 வழிகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாம்.. என்னென்ன வழிகள்..!


ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் பல நடைமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

1.  முதலில், சரியாக நிரப்பிய விண்ணப்பத்துடன், காசோலை அல்லது வங்கி டிராப்ட் இணைத்து, கிளை அலுவலகம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் சேவை மையம் (ISC) அல்லது சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் பதிவாளர் அல்லது பரிமாற்ற முகவர் இடத்தில் சமர்ப்பிக்கலாம்.

2. மற்றொரு வழியாக, சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் நேரடியாக முதலீடு செய்யலாம்.

3. மேலும், நிதி ஆலோசகர் மூலமாகவோ அல்லது அவர்களின் வழிகாட்டுதலுடன் முதலீடு செய்யலாம். இதற்காக AMFI-யுடன் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரின் உதவியைக் கையாளலாம் அல்லது நேரடியாக முதலீடு செய்யலாம்.

4. மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் தனிநபர்கள் அல்லது வங்கி, புரோக்கரிங் நிறுவனம், ஆன்லைன் சேவை வழங்குநர் போன்ற நிறுவனங்கள் ஆக இருக்கலாம்.

இன்றைய டெக்னாலஜி காலத்தில், அனைத்தும் பாதுகாப்பான முறையில் செயல்படுவதால், ஆன்லைனில் முதலீடு செய்வதும் மிக எளிதாகவும் சுலபமாகவும் இருக்கிறது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்