SIP திட்டத்தில் இடையில் பணம் கட்ட முடியவில்லையா? உடனே இதை செய்யுங்கள்..!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் திட்டங்களில் ஒன்று எஸ்ஐபி (SIP) ஆகும். இந்த திட்டத்தின் மூலம், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியை தேர்வு செய்யலாம், அப்போது உங்கள் வங்கி கணக்கிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு நிதி தானாகவே செலுத்தப்படும். இந்த முறையில், நீங்கள் மாதந்தோறும் சுலபமாக முதலீடு செய்வது சாத்தியம்.

ஆனால், சில நேரங்களில் எதிர்பாராத காரணங்களால் எஸ்ஐபி கட்ட முடியாமல் போகலாம். இது பற்றிய சந்தேகத்திற்கு இப்போது பதில் காண்போம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் விதிமுறைகளை


பொருத்தவரை, மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக எஸ்ஐபி கட்ட முடியாமல் இருந்தால், அது தானாகவே ரத்து செய்யப்படும். இந்நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அபராதம் விதிப்பதில்லை, ஆனால் வங்கிகள் செக் திரும்பினால், பணம் இல்லாத காரணத்தால் அபராதம் விதிக்கலாம்.

எஸ்ஐபியை தொடர்ந்து செலுத்த முடியாத சந்தர்ப்பத்தில், நீங்கள் உடனடியாக எஸ்ஐபியை ரத்து செய்யலாம் அல்லது "பாஸ்" என்ற வாய்ப்பை பயன்படுத்தலாம். இதனால், சில மாதங்களுக்கு கட்டாமல் இருக்கலாம், அதன் பிறகு எஸ்ஐபி தானாகவே தொடரும். சில மாதங்களுக்கு கட்ட முடியாத நிலை ஏற்பட்டால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் இணையதளத்தின் மூலம் "பாஸ்" வசதியை பயன்படுத்த முடியும்.

உங்களால் நிரந்தரமாக எஸ்ஐபி கட்ட முடியாததாக இருந்தால், எஸ்ஐபியை முழுமையாக ரத்து செய்யலாம். இந்த நடவடிக்கையின் பின்னர், உங்கள் பணம் நிலவரப்படி திரும்ப கிடைக்கும்.


புதியது பழையவை

தொடர்பு படிவம்