பெண் பொறியாளர்களுக்கு மட்டுமே வேலை.. ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு!
ஏர்டெல் நிறுவனம் இனி பெண் பொறியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுக்க முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் 5ஜி பிளஸ் சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இதுவரை டெல்லி, மும்பை, வாரணாசி, சிலிகுரி, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், சென்னை, குருகிராம், பானிபட், பாட்னா மற்றும் கவுகாத்தி ஆகிய 12 நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதால் அதற்கான பொறியாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி இதுகுறித்து கூறியபோது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைக்காக வேலைக்கு பொறியாளர்களை நியமனம் செய்யும் பணி தொடங்கி விட்டதாகவும் குறிப்பாக அதிக அளவு பெண் பொறியாளர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் பணியை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகுதியான நபர்களை தேர்வு செய்து வேலைக்கு அமர்த்துவது மூலம் பன்முக தன்மையுடன் கூடிய வேலை நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஏர்டெல் நிறுவனத்தில் இனி அதிக அளவில் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 5ஜி சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிவேக இன்டர்நெட் சேவையான 5ஜி 2024 ஆம் ஆண்டில் அனைத்து இந்தியர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




