பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 62,500.. முதலீட்டாளர்கள் உற்சாகம்
இந்திய சந்தைகள் உலகளாவிய பலவீனத்தை மீறி, எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு வருகின்றன. பங்குச்சந்தையின் சிறந்த வளர்ச்சி விகிதங்களை நாம் தொடர்ந்து பார்க்கும்போது, சென்செக்ஸ் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டத்தில் நீண்ட கால முதலீட்டாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பங்குகளை விற்று லாபத்தை பெறலாம் என்பதை தவிர்க்க வேண்டும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 211.16 புள்ளிகள் அல்லது 0.34 புள்ளிகள் உயர்ந்து 62,504.80 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 38.25 புள்ளிகள் அல்லது 0.21 சதவீதம் உயர்ந்து 18,551.00 ஆகவும் முடிவடைந்தது.
இன்று உயர்ந்த பங்குகள்
ரிலையன்ஸ்: 3.40 சதவீதம்
நெஸ்லே: 1.41 சதவீதம்
ஏசியன் பெயிண்ட்ஸ்: 1.38 சதவீதம்
பஜாஜ் ஃபின்சர்வ்: 1.03 சதவீதம்
ஐசிஐசிஐ வங்கி: 0.67 சதவீதம்
ஆக்சிஸ் வங்கி: 0.59 சதவீதம்
இன்று சரிந்த பங்குகள்
டாடா ஸ்டீல்: -1.18 சதவீதம்
HDFC வங்கி: -1.06 சதவீதம்
பார்தி ஏர்டெல்: -1.04 சதவீதம்
HCL டெக்: -0.79 சதவீதம்
HDFC: -0.78 சதவீதம்
உயர்ந்த நிப்டி பங்குகள்
பிபிசிஎல்: 5.02 சதவீதம்
ரிலையன்ஸ்: 3.44 சதவீதம்
ஹீரோ மோட்டோகார்ப்: 2.78 சதவீதம்
டாடா கான்ஸ். தயாரிப்பு: 1.92 சதவீதம்
எஸ்பிஐ ஆயுள் காப்பீடு: 1.48 சதவீதம்
நெஸ்லே: 1.46 சதவீதம்
சரிந்த நிப்டி பங்குகள்
ஹிண்டால்கோ: -2.16 சதவீதம்
JSW ஸ்டீல்: -1.45 சதவீதம்
அப்பல்லோ மருத்துவமனை: -1.41 சதவீதம்
டாடா ஸ்டீல்: -1.22 சதவீதம்
பார்தி ஏர்டெல்: -1.12 சதவீதம்




