டூவீலர் போல் சாய்ந்து செல்லும் வந்தே பாரத் டில்டிங் ரயில்கள்.. வேற லெவல் வேகம்!
ஒரு டூவீலர் நேராக செல்லும்போது செல்லும் வேகத்தை விட சற்று சாய்ந்த நிலையில் செல்லும் வேகம் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் தற்போது மிக வேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் சற்றே சாய்ந்த நிலையில் செல்லும் வகையில் உருவாக்க தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே வாரிய உயர் அதிகாரிகள் கூறியபோது சாய்ந்த நிலையில் செல்லும் வந்தே பாரத் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று இந்த தொழில்நுட்ப கூட்டாளிகளுடன் இணைந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்களை சாய்ந்த தொழில் நுட்பத்துடன் பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
டில்டிங் ரயில்கள் என்று கூறப்படும் இந்த ரயில்கள் அதி வேகத்தில் இயங்கும் என்றும் சாய்ந்த நிலையில் செல்லும் போது உள்ளே இருக்கும் பொருட்கள் மற்றும் மனிதர்கள் சாயாத வகையில் தொழில்நுட்ப வடிவமைக்கப்படும் என்றும் புவியீர்ப்பு விசையை எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
டில்டிங் ரயில்கள் என்று கூறப்படும் இந்த சாய்ந்த ரயில்கள் தற்போது இத்தாலி, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, பின்லாந்து, ரஷ்யா, செக் குடியரசு, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த நாடுகளில் சென்று அதன் தொழில்நுட்பத்தை பெற்று இந்தியாவில் மிக விரைவில் சாய்ந்த நிலையில் உள்ள வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவற்றில் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சாய்ந்த நிலையில் உள்ள தொழில்நுட்பம் இருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சாய்ந்த நிலையில் உள்ள ரயில்கள் தற்போதுள்ள வேகத்தை விட இருமடங்கு வேகத்துடன் செல்லும் என்று கூறப்படுவதால் இனி ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகத்திற்கு செல்லும் நேரம் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






