தங்கம் விலை இந்தியாவில் திடீர் சரிவு.. இந்த ஒரே ஒரு காரணம் தான்!

 தங்கம் விலை இந்தியாவில் திடீர் சரிவு.. இந்த ஒரே ஒரு காரணம் தான்!



வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்ததால் இந்திய தலைநகர் டெல்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.61 குறைந்து ரூ.52,980 ஆக உள்ளது 


நேற்று தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.52,883-ஐ தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், Goodreturns தகவலின்படிபடி, நவம்பர் 28 அன்று டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.53,140 ஆக உள்ளது.

சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,750.46 டாலராகவும், வெள்ளியின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 21.25 டாலராகவும் இருந்தது.


 தொடர்ச்சியான திருமண நாட்கள் வருவதால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தங்கத்தின் விலை வெளிநாட்டில் அதிக அளவு குறைந்தாலும் இந்தியாவில் தங்கத்திற்கான வரி அதிகம் என்பதால் மிகப்பெரிய அளவில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தங்கம் விலை குறைந்து கொண்டு வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் என்பது ஆபரணங்களாக மட்டுமல்லாமல் சிறந்த சேமிப்பாகவும் மக்கள் நினைத்து வருகிறார்கள் என்றும் அதனால் தான் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய மக்கள் தயங்குவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் ,பங்குச் சந்தை உள்பட எந்த முதலீட்டிலும் ரிஸ்க் அதிகம் உள்ளது என்றும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றும் ஆனால் தங்கம் என்பது நீண்ட கால முதலீட்டை பொருத்தவரை இறக்கத்திற்கு வாய்ப்பே இல்லை என்றும் அது இலாபத்தை மட்டுமே கொடுத்துள்ளது என்றும் பொதுமக்கள் கருதுகின்றனர்.

எனவே தான் தங்கத்தை தங்களால் இயன்ற அளவு அனைத்து இந்திய மக்களும் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்