ஒரு மியூச்சுவல் ஃபண்டில் உள்ள ரிஸ்க்கை கண்டுபிடிப்பது எப்படி?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது மிகவும் பாதுகாப்பானது என்பதும் அதிக வருவாய் தரக்கூடிய ஒரு முதலீட்டு திட்டம் என்ற விழிப்புணர்வு இந்திய மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
அதனால் தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மற்றும் முதலீடு செய்யப்படும் தொகையின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பான முறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில் பாதுகாப்பு மட்டுமின்றி பணவீக்கத்தின் அளவிற்கு ஏற்ப நமக்கு அந்த முதலீட்டால் கிடைக்கும் வருமானமும் இருக்கவேண்டும் என்பது முக்கியமானது.
முதலீடு
அந்த வகையில் பிக்சட் டெபாசிட், தபால் நிலையங்களில் முதலீடு செய்தல் உள்ளிட்டவைகள் பாதுகாப்பானது என்றாலும் பணவீக்கத்திற்கு இணையாக அதில் வருமானம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகும்.
மியூச்சுவல் பண்டு
இந்த நிலையில் ஓரளவு ரிஸ்க் இருந்தாலும் மியூச்சுவல் பண்டு முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு நல்ல வருவாய் கொடுக்கக்கூடிய ஒரு திட்டம் என்று நிதி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது ஏற்படும் ரிஸ்க் முறைகளை எப்படி கண்டுபிடிப்பது என்பதையும் தற்போது பார்ப்போம்.
ரிஸ்க்
ரிஸ்க்கின் அளவை காட்டும் அடையாளங்களை முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் இருக்கும் என்பதையும் அது குறித்து முழுமையான தகவல்களை நிதி ஆலோசகர்களிடம் முதலீட்டுக்கு முன்பாகவே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ரிஸ்கோமீட்டர்
ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் ரிஸ்கோமீட்டர் என்பதை செபி கட்டாயமாக்கி உள்ளது. இந்த ரிஸ்கோமீட்டர் ஒரு ஃபண்டில் உள்ள ரிஸ்க்கை தெளிவாக குறிப்பிடும். ரிஸ்க் குறைவாக இருக்கும் ஃபண்ட்களில் ஓரளவு நிலையான வருமானமும் அதிகமாக இருக்கும் ஃபண்ட்களில் அதிக வருவாய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செபி
இந்த வகை ரிஸ்கோமிட்டரை செபி கட்டாயமாக்கியுள்ளதால் ஒவ்வொரு பூக்களுமே அந்த ஃபண்டின் ரிஸ்க் அளவுகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இண்டிகேட்டர்
ஒரு மியூச்சுவல் ஃபண்டின் ரிஸ்க் பற்றிய ஒரு மேலோட்டப் பார்வையை வழங்கும் ரிஸ்க்கோமீட்டர் மட்டுமின்றி, ஃபேக்ட்ஷீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட ரிஸ்க் இண்டிகேட்டர்களையும் ஒருவர் ஆராய்ந்து பார்க்கலாம். ஒரு ஃபண்டின் ரிட்டர்ன் எவ்வளவு வரம்பைக் கொண்டிருக்கும் என்பதை திட்ட விலக்கம் அளவிடுகிறது. ஒரு ஸ்கீமில் கிடைக்கும் ரிட்டர்னின் திட்டவிலக்கம் அதிகமாக இருந்தால், அதன் செயல்திறன் பரந்துபட்டதாக உள்ளது என்று பொருள். அதாவது எளிதில் ஏறி இறங்கக் கூடும் என்று புரிந்துகொள்ளலாம்.
மதிப்பீடு
எனவே எந்த திட்டத்தில் முதலீடு செய்கிறோமோ அந்த திட்டத்துக்கு உள்ள அழுக்குகளை குறிப்பிடும் கிலோமீட்டர் அளவீடுகளை மதிப்பீடு செய்து அதன் பின்னர் நிதி ஆலோசகரின் ஆலோசனை கேட்டு முதலீடு செய்யுங்கள்.






