ஒவ்வொரு ஆண்டும் கோடீஸ்வரர்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும் என்றும் உலகத்தில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரராகி வருகிறார்கள் என்றும் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக வருகிறார்கள் என்றும் கூறப்பட்டு வரும். ஆனால் 2022 ஆம் ஆண்டை பொறுத்தவரை பணக்காரர்களுக்கு ஒரு மோசமான ஆண்டு கூறினால் அது மிகையாகாது.
உலக பணக்காரர்கள் தங்களது சொத்துக்களை இழந்து உள்ள சோகமான அனுபவத்தை தான் 2022ஆம் ஆண்டு பெற்றுள்ளனர். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்று அறியப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளாமல் இரண்டாவது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டார். அவருக்கு ஒரு சில மாதங்களில் 400 பில்லியன் டாலர் வரை நஷ்டம் ஏற்பட்டது. அவருடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்கு கடந்த ஆண்டு ஆரம்பத்தில் 450 டாலர் என்று இருந்த நிலையில் ஆண்டு இறுதியில் 112 டாலராக இறங்கிவிட்டது. இதனால் அவருடைய சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பில்லியன் டாலர் என்றால் 8 ஆயிரம் கோடி ரூபாய் என்ற மதிப்பு என்றால், 200 பில்லியன் டாலர் என்றால் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களை பற்றி பார்ப்போம் என்றால் இந்தியாவில் 142 பில்லியனர்கள் 2022ஆம் ஆண்டின் ஆரம்த்தில் இருந்த நிலையில் இருந்த 2022ஆம் ஆண்டின் முடிவின்போது 120 பில்லியனர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி என்றால் 22 பில்லியனர்கள் காணாமல் போய் அவர்கள் மில்லியனர்களாக மாறி உள்ளனர்.
இந்தியாவின் தொழிலதிபர் அதானியின் சொத்து மதிப்பு மிக அதிகமாக உயர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டு பல தொழில் அதிபர்களுக்கு இறங்கு முகமாக இருந்தாலும் அதானிக்கு மட்டும் ஏறுமுகமாக இருந்தது. அதானி போர்ட், அதானி எக்ஸ்போர்ட்ஸ் என அவருடைய நிறுவனங்கள் அனைத்துமே மிகப்பெரிய லாபத்தை பெற்றன. குறிப்பாக குஜராத் உள்ள துறைமுகத்தை அவர் வாங்கிய பிறகு அவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2022ஆம் ஆண்டு அதானியின் சொத்து மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டரை சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொருத்தவரை சன் பார்மா உரிமையாளரின் சொத்து மதிப்பு, ஏர்டெல் நிறுவனத்தின் உரிமையாளரின் சொத்து மதிப்பும் உயர்ந்து உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்க 5ஜி தொழில்நுட்பமும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற விரல்விட்டு ஒரு சில குறிப்பிட்ட பில்லியனர்கள் மட்டுமே பில்லியனர் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலையில் பல பில்லியனர்கள் மில்லியனர்கள் ஆக மாற்றிய ஆண்டாகவே 2022ஆம் ஆண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் கூடுதலாக பில்லியனர்கள் இந்தியாவில் உருவாகுவார்களா? உலகம் முழுவதும் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





