இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை சவரன் ரூ.50,000 செல்லும்.. வல்லுனர்கள் கணிப்பு

 








இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 50,000 வரை விற்பனையாகும் என தங்க நகையை கண்காணிக்கும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


தங்கம் விலை தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த ஆறு மாதங்களாக தங்கத்தின் விலை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 


இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராம் 20 ரூபாயும் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை 40 ஆயிரத்து 40 என்று விற்பனையாகி வந்த தங்கம் இன்று 40 ஆயிரத்து 200 என விற்பனை ஆகி வருவது வருவதைப் பார்க்கும்போது இன்னும் ஒரு சில மாதங்களில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 6 ஆயிரம் ரூபாயை தாண்டும் என்றும் ஒரு சவரன் ரூ 50,000 என விற்பனையாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

தங்கம் எப்போது வாங்கினாலும் அது லாபத்தை தான் கொடுக்கும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. வேறு எந்த முதலீட்டில் முதலீடு செய்தாலும் அதில் நஷ்டம் வர வாய்ப்பிருப்பதாகவும் ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டும் நீண்ட காலத்தில் லாபம் மட்டுமே பெறுவார்கள் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.


அந்த வகையில் தற்போது விலை அதிகமாக இருக்கிறது என்றாலும் தங்கத்தில் குறைந்த அளவு முதலீடு செய்யலாம் என்று நினைக்காமல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் கிட்டத்தட்ட இருமடங்கு லாபம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரூபாய் 6000 என இருக்கும் தங்கம் ஒரு கிராம் தங்கம் விலை 2025-ஆம் ஆண்டுக்குள் ரூபாய் 10,000 என மாற வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தங்கத்தில் கிடைக்கும் போதெல்லாம் முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது வல்லுநர்களின் அறிவுரையாக உள்ளது. 


தங்கம் என்பது எளிதில் எடுத்துச் செல்லப்படும் ஒரு பொருள் என்பதால் எந்த நாட்டிற்கு வேண்டும் என்றாலும் எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் அதை பணமாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் மியூச்சுவல் பண்ட், பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் திடீரென பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் தங்கம் மட்டுமே அவசர காலத்துக்கு உதவும் ஒரு முதலீடாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தங்கத்தை நாம் தங்க காயின்கள் ஆக வாங்கி வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். தங்கத்தை நகைகளாக வாங்கினால் செய்கூலி சேதாரம் என தேவையில்லாத செலவுகள் வரும். அதே போல் தங்க இடிஎஃப் மற்றும் தங்க பத்திரங்கள் வாங்கினாலும் நாம் அவசர நேரத்தில் அதை பயன்படுத்த முடியாது. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் நாணயங்களாக வாங்கினால் அதை உடனடியாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.


சமீபத்தில் இலங்கை நாடு திவாலான போது தங்கத்தை சேமித்து வைத்தவர்கள் மட்டுமே அந்நாட்டில் தப்பித்துக் கொண்டனர் என்பது தங்க சேமிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். அதேபோல் எந்த நாடு எப்பொழுது திவாலாகும் என்று தெரியாது என்பதால் தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்