சேமிப்பு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டும் ஒன்று என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறானது. சேமிப்பு என்பது நாம் எவ்வளவு ரூபாய் சேமித்து இருக்கின்றோமோ, அவ்வளவு தான் நமக்கு கிடைக்கும். அல்லது அதைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீடு. முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வருடமும் லாபம் அதிகரித்துக் கொண்டே வரும்.
ஒரு உண்டியலில் ரூபாய் தினசரி 10 ரூபாய் போட்டால் ஒரு மாதத்திற்கு 300 ரூபாய் ஒரு வருடத்திற்கு 300 ரூபாய் இருக்கும். நாம் எவ்வளவு பணம் சேமிக்கின்றோமோ, அந்த பணம் தான் அதில் இருக்கும். அதேபோல் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை போட்டால் நாம் எவ்வளவு தொகை போட்டோமா அதைவிட மிகக் குறைந்த அளவு வட்டியுடன் நமக்கு திரும்ப கிடைக்கும். இதற்கு பெயர்தான் சேமிப்பு.
ஆனால் முதலீடு என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் லாபம் கிடைத்துக்கொண்டே இருக்கும். நமது முதலீடு தொகையுடன் லாபத்தையும் இணைந்து ஒரு குறிப்பிட்ட வருடத்தில் இரு மடங்கு, 3 மடங்கு என பெருகும்.
எனவே வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி ஒவ்வொரு மாதமும் பணம் போட்டால் அதற்கு பெயர் சேமிப்பு. ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டால் அது முதலீடு. இவை தான் இந்த இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்.
வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துவது போல மியூச்சுவல் ஃபண்ட்ஸ்களை செபி என்ற அமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. மியூச்சுவல் ஃபண்ட் வர்த்தகம் செய்ய செபியிடம் இருந்து அனுமதியை பெற வேண்டும் என்பதால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதால் எந்தவித ஆபத்தும் இருக்காது.
மியூச்சுவல் பண்ட் முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் செலுத்தி கொண்டே வந்தால் அது அடுத்த வருடமோ அல்லது அதற்கு அடுத்த வருடமோ நமக்கு லாபத்துடன் கூடிய வருவாய் கொடுக்கும். அதே போல் நீண்ட காலத்திற்கு கோடிகளை கொடுக்கும் அளவிற்கு செல்வங்களை அள்ளி கொடுக்கும்.
உதாரணமாக ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாய் நாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் 20 வருடத்தில் நாம் கட்டியிருக்கும் தொகை கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் தான் இருக்கும். ஆனால் அந்த தொகை நாம் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நமகு கிட்டத்தட்ட 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே நல்ல ஒரு நல்ல பொருளாதார நிபுணரை ஆலோசனை செய்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல மியூச்சுவல் பண்டில் முதலீடு செலுத்தினால் நிச்சயம் 10 முதல் 20 வருடங்கள் காத்திருந்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் பெயரில் உங்களால் முடிந்த ஒரு தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரூபாய் ஆயிரம் முதலீடு செய்தாலே அந்த குழந்தை 21 வயது எட்டும்போது அந்த குழந்தையின் மேல் படிப்புக்கு அல்லது திருமணத்திற்கு ஏற்ற ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும்.
எனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு தயங்காமல், காத்திருக்காமல் உடனடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய ஆரம்பிக்கின்றோமோ, அவ்வளவு சீக்கிரம் நமக்கு பின்னாளில் மிகப்பெரிய தொகை கிடைக்கும்.
அரசு ஊழியர்கள் உள்பட யாருக்குமே தற்போது பென்ஷன் என்பது இல்லை என்பதால் வேலைக்கு சேர்ந்த உடனே ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நமது ஓய்வுகால திட்டத்திற்காக நாம் முதலீடு செய்து நாம் ரிட்டையர் ஆகும்போது ஒரு மிகப்பெரிய தொகையுடன் மீதி நாட்களை இன்பமாக கழிக்கலாம்.






