மியூச்சுவல் ஃபண்டில் முறைகேடே செய்ய முடியாதா? ‘துணிவு’ படத்தை நியாயப்படுத்தும் பொருளாதார ஆலோசர்கள்

 இந்தியாவில் தற்போது படிப்படியாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்துவரும் நிலையில் திடீரென துணிவு திரைப்படம் மியூச்சுவல் ஃபண்டு குறித்த ஒரு சந்தேகத்தை எழுப்பி உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் தற்போது கடும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 





மியூச்சுவல் ஃபண்டில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என்றும் ஏஎம்சி மற்றும் செபி பார்வையில் தான் முழுக்க முழுக்க மியூச்சுவல் பண்டு இயங்கி வருகிறது என்பதால் இதில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என்று தான் இதுவரை மக்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் துணிவு திரைப்படம் மியூச்சுவல் பண்டில் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியதை அடுத்து முதலீட்டாளர்கள் தற்போது அச்சம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பொருளாதார ஆலோசகர்கள் இந்த படம் குறித்து தங்களது கருத்துக்களை தற்போது தெரிவித்து வருகின்றனர்.







மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமின்றி எந்த ஒரு சேமிப்பு திட்டமாக இருந்தாலும் 100% பாதுகாப்பானது என்று உறுதியாக சொல்ல முடியாது. ஒரு சில சதவீதமாவது முறைகேடு நடக்கத்தான் செய்யும், ஆனால் அதிகபட்ச முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்ற முதலீட்டில் நாம் முதலீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பார்த்தால் மியூச்சுவல் ஃபண்டில் துணிவு பட்அத்தில் கூடிய படி முறைகேடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து நஷ்டமானதாக முதலீட்டாளர்களுக்கு துணிவு படத்தில் காட்டப்படும் யுவர்ஸ் வங்கி கணக்கு காட்டியதாக அந்த படத்தின் காட்சிகள் கூறுகிறது. முதல் கட்டமாக ஒரு வங்கி தானாகவே மியூச்சுவல் ஃபண்ட்டை தொடங்க முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வங்கி மியூச்சுவல் ஃபண்ட் தொடங்க வேண்டுமென்றால் அந்த நிறுவனம் செபி மற்றும் ஏஎம்சி இடம் அனுமதி பெற வேண்டும். ஏ.எம்சி தான் அந்த மியூச்சுவல் ஃபண்ட்டை தொடங்கி வழிநடத்தும்.

ஒரு வங்கியின் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் இருந்தாலும் அந்த வங்கிக்கும் மியூச்சுவல் ஃபண்ட்டுக்கும் சம்பந்தமில்லை என்பதும் செபி, ஏஎம்சி கட்டுப்பாட்டில் தான் முழுக்க முழுக்க அந்த மியூச்சுவல் ஃபண்ட் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மியூச்சுவல் ஃபண்டில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் இதிலிருந்து தெரிய வருகிறது.

 ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயரை பயன்படுத்தி மிபோலியான ஒரு திட்டத்தை பொதுமக்களிடம் கொடுத்து அதில் பணம் சம்பாதித்து அதில் முறைகேடு செய்தால் அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பொறுப்பேற்க முடியாது என்றும் துணிவு படத்தில் வந்தது அது போன்ற ஒரு திட்டம்தான் என்றும் பொருளாதாரா ஆலோசகர்கல் தெரிவிக்கின்றனர்.

எனவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்பது பாதுகாப்பானது தான், அதில் முதலீடு தாராளமாக செய்யலாம், அதற்காக அதில் முறைகேடு இல்லை என்றும் சொல்ல முடியாது, ஆனால் அதே நேரத்தில் முறைகேடு மிகவும் அரிதாகவே நடக்கும் என்பதையும் பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.


துணிவு படத்தில் வந்த காட்சிகள் போலவே இந்தியாவில் ஏற்கனவே ஒரு பெரிய தொழிலதிபர் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதையும் அந்த ஆலோசர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால் அதே நேரத்தில் அந்த முறைகேட்டின் காலம் என்பது ரொம்ப பழமையானது என்றும், தற்போது செபி கடுமையான சட்ட திட்டங்களை இயற்றி முறைகேடு செய்ய முடியாத வகையில் திட்டங்களை வகுத்துள்ளதால் இன்றைய நிலையில் உள்ள மியூச்சுவல் பண்டுகள் கண்டிப்பாக முறைகேடு செய்ய வாய்ப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது.


 மேலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் இந்த பண்டு எத்தனை ஆண்டுகள் கழித்து எவ்வளவு சதவீதம் வருமானம் கொடுக்கும் என்று தெரிந்து கொள்வதை போலவே இந்த பண்டில் முதலீடு செய்வதால் எந்த அளவுக்கு ரிஸ்க் இருக்கிறது? எந்த அளவுக்கு நமது முதலீடு குறையவும் வாய்ப்பு இருக்கிறது? என்பதையும் முதலீடு செய்யும் முன் கேட்டு தெரிந்து கொண்டு அதன்பின் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்