தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தற்போதைய நிலையில் தங்கம் சென்னையில் ஒரு கிராம் 5320 ரூபாய்க்கும் ஒரு சவரன் 42560க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் தங்கம் கண்டிப்பாக ஒரு கிராம் இந்த ஆண்டு இறுதிக்குள் 6 ஆயிரம் ரூபாய் வரை வந்து விடும் என்றும் இன்னும் 15 முதல் 18 மாதங்களில் ஒரு சவரன் 60 ஆயிரத்துக்கு மேல் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது தான். தங்கம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால் முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதி செய்யப்படும்போது டாலரில் தான் நாம் பணம் செலுத்த வேண்டும் என்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைய குறைய நாம் அதிகமான அளவு தங்கத்திற்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பெரிய அளவில் உயரவில்லை என்பதும் இந்தியாவில் மட்டும் அதிகமாக உயர்ந்து வருவதற்கு இந்திய ரூபாயின் மதிப்பு வலுவிழந்து வருவது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவில் பெடரல் வங்கி விரைவில் வட்டியை உயர்த்தும் என்றும் அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு வட்டியை உயர்த்தாது என்பதால் அமெரிக்காவில் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே 14 முதல் 18 மாதங்களில் தங்கம் விலை இன்னும் அதிகம் உயரும் என்பதால் இப்போது விலை அதிகமாக இருந்தாலும் தங்கத்தின் முதலீடு செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்று தான் கூறப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை நிச்சயமாக உயரும் என்பதால் தங்கத்தில் விலை எப்படி இருந்தாலும் அவ்வப்போது சிறுக சிறுக வாங்கிக் கொண்டே இருந்தால் சராசரியாக நாம் வாங்கிய விலையை விட 10 முதல் 15 சதவிகிதம் வரை லாபம் கொடுக்கும் ஒரு முதலீடாகத்தான் தங்கம் இருக்கும் என்று பொருளாதார ஆலோசர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை வாங்கிக் கொண்டே இருந்தால் குறைந்த விலையில் தங்கம் வாங்கும்போது அதிகமான விலைக்கு தங்கம் வாங்கும்போதும் சராசரி ஆகிவிடும். நீண்ட காலத்திற்கு தங்கம் நமக்கு ஒரு நல்ல வருவாய் தரும் என்று கூறப்படுவதால் தங்கம் விலை உயர்ந்து விட்டது என்ற காரணத்தினால் வாங்காமல் இருந்துவிட வேண்டாம் என்றும் தொடர்ச்சியாக தங்கத்தில் சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் பொருளாதார ஆலோசர்களின் பரிந்துரையாக உள்ளது.


