மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பாதுகாப்பானது என்றும் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
மியூச்சுவல் பண்ட் முதலீடு என்பது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் அந்த பணம் ஐந்து அல்லது பத்து வருடங்களில் அல்லது பத்து அல்லது இருபது வருடங்களில் மிகப்பெரிய தொகையாக நம்முடைய கைக்கு வரும்.
குறிப்பாக ஒருவருக்கு குழந்தை பிறந்த பின்னர் ஆண் குழந்தையாக இருந்தால் மேல் படிப்பிற்கு பெண் குழந்தையாக இருந்தால் திருமணத்திற்கு என இப்போது இருந்தே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்து அதில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வர வேண்டும். அவ்வாறு சேமித்து கொண்டே வரும் போது குழந்தை வளர வளர அந்த முதலீடும் வளர்ந்து வரும் என்பதும் குழந்தையின் 21-வது வயதில் அது மிகப்பெரிய தொகையாக ஆலமரம் போல் வளர்ந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மியூச்சுவல் பண்டில் SIP என்ற ஒவ்வொரு ஃபண்டு உண்டு. இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கும் வகை ஆகும். அதேபோல் LUMPSUM என்ற இன்னொரு வகையில் மொத்தமாக சேமிக்கப்படும் வகை என இரண்டு வகையாக உண்டு.
இதில் SIP வகை என்பது மிகவும் சிறந்தது என பொருளாதார ஆலோசகர் தெரிவித்து வருகின்றனர். SIP என்பது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு சராசரியை நிர்ணயம் செய்யும். அதாவது நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு நிறுவனத்தின் NAV, 10 ரூபாயாக இருந்தாலும் உங்களுக்கு 100 யூனிட்டுகள் கிடைக்கும். அதே திடீரென படிப்படியாக குறைந்து 5 ரூபாய் ஆக மாறினால் உங்களுக்கு 200 யூனிட்டுகள் கிடைக்கும். அதுவே மீண்டும் உயர்ந்து 20 ரூபாய் ஆக மாறினால் உங்களுக்கு 50 யூனிட்டுக்கள் கிடைக்கும். ஆகமொத்தம் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை பொறுத்து உங்களுக்கு யூனிட் அதிகமாகவும் குறைவாகவும் கிடைக்கும் என்பதால் நீண்ட கால முதலீட்டில் போது அது சராசரியாக்க்ப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் LUMPSUM முதலீட்டில் அவ்வாறு இருக்காது. நீங்கள் மூ 50,000 அல்லது ஒரு லட்சம் முதலீடு செய்திருந்தால் அந்த தொகை பங்குச் சந்தை இறங்கினால் குறையும் என்பது ஏறினால் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே LUMPSUM முதலீட்டை விட SIP முதலீடு பாதுகாப்பானது மற்றும் அதிக வருவாய் தரக் கூடியது என பொருளாதார வல்லுனர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.



